RSS

Category Archives: நாகூர் மொட்டை

நாகூர் மொட்டை

Nagore Mottai 

இவர்களை
‘முடி திருத்துபவர்கள்’ என்றால்
முற்றிலும் பொருந்தாது.
‘சிகை கலைஞர்கள்’ என்றால்
சிந்தனைக்கு ஒவ்வாது.
‘சிகை களைஞர்கள்’ என்று
ஏன் சொல்லக்கூடாது?

களையான முடியை
களைவதில் வல்லவர்கள்.
காரியத்தை கச்சிதமாய்
‘முடி’க்கத் தெரிந்த
களைஞர்கள் இவர்கள்.

கத்தி பட்டால்
கருமுடிதான் இவர்களுக்கு
புரைய எதிர்ப்பி !
(antiseptic)

சுகாதாரம் .. .. .. ..
“வீசம் என்ன விலை?”
என்பார்கள்.
கிருமி நாசினி .. .. ..
“கிலோ என்ன விலை?”
என்பார்கள்.

‘அபூர்வ ராகங்கள்’ கமலை
‘ஆளவந்தான்’ கமல் ஆக்கும்
அபூர்வ வித்தை அறிந்தவர்கள் !

கத்தி பேசுவார்கள் சிலர்.
இவர்களுக்கு .. ..
கத்தி பேசும் !

இங்கு வரும்
எல்லார் குடுமியும்
இவர்கள் கையில்தான் !

தடி எடுத்தவனெல்லாம்
தண்டல்காரன் ஆனதைப்போல
கத்தி பிடித்தவனெல்லாம்
கைத்தொழில் கற்றவன் என்று
மார்தட்டும் மாடம் – இந்த
குளத்தங்கரை கூடம் !

இங்கு
மழித்தலுக்குப் பின்
கூட்டல் உண்டு !

இந்த
‘சவுரித் திடல்’,
டோப்பாக்காரர்களுக்கு
சாப்பாடு போடும்
சப்ளைக் கிடங்கு !

ஆண்டுதோறும் அல்ல ..
அனுதினமும் இங்கு
சந்தனம் பூசும் வைபவம் !

முடி துறப்பதற்காகவே
இங்கு வருவார்கள்
இந்நாட்டு மன்னர்கள் !

முடி சூடா மன்னர்களாக
இங்கிருந்து
திரும்புபவர்கள் பட்டியலில்
திருப்பதியும் உண்டு
பழனியும் உண்டு
நாகூர் மீரான்
நாகூர் கனியும் உண்டு !!

விளைச்சல் விசேஷமாய் இருந்து
அறுவடையும் அமோகமாக இருந்தால்
காண்டிராக்டர் காட்டிலே
மயிர்தான் போங்க !

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 47 other followers