RSS

18 Oct

இன்று Gulf Daily News பத்திரிக்கையில் வெளியான ஒரு செய்தியைப் படித்து மனது வேதனைக்குள்ளானது.

தெற்கு சோமாலியாவில் கடந்த ஒரு மாத காலமாக 10-25 வயது பிரிவு மாணவ/ மாணவிகளுக்கான புனித குர்ஆன் ஓதுதல் மற்றும் பொது அறிவுப்போட்டியை இளைஞர் போராளிக்குழு (Al Shabaab Rebels) என்ற அமைப்பு நடத்தியது.

முதலிடத்தை வென்ற 17-வயது மாணவனுக்கு கிடைத்த பரிசுப்பொருள் என்ன தெரியுமா?

ஒரு ஏ.கே.47 இயந்திரத் துப்பாக்கி, இரண்டு கையெறி குண்டு, ஒரு கண்ணி வெடி மற்றும் ஒரு கணிப்பொறி வெகுமதியாக வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாம் இடத்தை வென்ற 22-வயது மாணவனுக்கு ஒரு ஏ.கே.47 இயந்திரத் துப்பாக்கி மற்றும் சில போர்தடவாளங்களை பரிசளித்திருக்கிறார்கள்.

பரிசு விழாவின் போது உரையாற்றிய நிகழ்ச்சி அமைப்பாளர்கள், “பெற்றோர்கள் முன்வந்து குழந்தைகளுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்க வேண்டும்” என்ற கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள்.

ஐ.நா.சபை ஆதரவுடன் ஆட்சி புரிந்து வரும் அதிபர் ஷேக் ஷரீஃப் அஹ்மதுக்கு எதிராக 18-வருடங்களாக அல்-ஷபாப் மற்றும் ஹிஸ்புல் இயக்கத்தினர் நடத்தி வரும் உள்நாட்டுப்போர் இது.

இன்று உலகம் முழுவதும் மதம் எனும் போர்வையில் ஆயுதம் ஏந்தி தங்கள் தீவிரவாதச் செயலுக்கு நியாயம் கற்பிப்பவர்களைக் காண்கையில் மு.மேத்தாவின் கவிதையொன்று ஞாபகத்திற்கு வருகிறது.

உலக வீதிகளில்
ஊர்வலம் போகும்
ஆயுதங்கள் .. ..

வீடுகளுக்குள் ஒளிந்தபடி
எட்டிப் பார்க்கும்
மனிதன்.  

 

One response to “

  1. nagoorumi

    October 19, 2009 at 7:20 pm

    ரொம்ப கவலை கொடுத்த செய்திதான். உலகத்தின் வருங்காலம் என்னாகுமே என்று நினைக்கத் தோன்றுகிற்து. அக்கறையாக பதிவுக்கு நன்றி. நாம் நமது இளைய தலைமுறைக்கு சரியான வழிகாட்டினால் — அமைதிக்கு — அதுவே பெரிய சேவையாகும்.

    நாகூர் ரூமி

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: