“இஸ்லாத்தை ஏற்று சாந்தி பெற்றவனே!
என்றாவது நீ சிந்தித்துப் பார்த்ததுண்டா?
எஃகினாலான வீரவாள் எத்தகு பொருளென்று?
இறைஏகத்துவத்தின் இரகசியங்களைப்
பொதிந்து வந்துள்ள பாடலின் முதலடியே அது!
எனக்கோ அவ்வீரடிப்பாவின் ஈற்றடியின் கவலைதான்
‘எளிமை’ என்னும் வாளை அல்லாஹ் உனக்கு அருள்வானாக!
இறை நம்பிகையாளனின் கைப்பிடியில்
இந்த வாளும் வந்துவிடின்
கதிகலக்கும் காலிதாகவோ,
அடலேறு அலீயாகவோ ஆகிவிடுவான்!”
– அல்லாமா இக்பால் (ஜர்பே கலீம்)