RSS

எம்.ஆர்.ராதா

26 Oct

M.R.Radha

1945-ல் திருச்சியில் திராவிடர் கழக மாநாடு. அனிபா அழைக்கப்பட்டிருந்தார். முதல் நாள் நெல்லையில் ஒரு திருமண விழாவில் கச்சேரி. அதை முடித்துக் கொண்டு, அனிபா ரெயிலில் திருச்சிக்குத் திரும்பினார்.

அப்பொது இரவு நேரம். மாலையில் நல்ல மழை பெய்து ஓய்ந்திருந்தது. காலையில் மாநாடு நடக்க இருந்தது. பந்தல் மைதானம் எப்படி இருக்கிறது என்று பார்த்து வர இரவோடு இரவாக மாநாட்டுப் பந்தலுக்கு அனிபா போனார்.

பந்தலில் அங்கங்கே தண்ணீர் தேங்கிக் கிடந்தது. அண்ணாவும், நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் தண்ணீரை வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள். அண்ணா வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு கையில் மண்வெட்டி பிடித்து, தேங்கிக் கிடந்த தண்ணீரை வெளியேற்றிக் கொண்டிருந்தார். ராதா அரைக்கால் சட்டை போட்டுக் கொண்டு, கையில் மண்வெட்டியுடன் அதே வேளையை செய்துக் கொண்டிருந்தார்.

இருவருமே அனிபாவுக்குத் தெரிந்தவர்கள். அவர்களுடன் அனிபா பேசிக்கொண்டு நின்றார். அப்போது திடீரென்று பெரியார் வந்து விட்டார். அவருக்கு வணக்கம் கூறிவிட்டு, அனிபா சற்று விலகிக் கொண்டார். பெரியாரும் “வாங்கய்யா” என்று பதில் சொல்லிவிட்டு, வந்த வேலையைப் பார்த்தார்.

“என்ன ராதா, அண்ணா வெட்டினால் தண்ணீர் ஓடுகிறது. நீங்கள் வெட்டினால் தண்ணீர் அப்படியே நிற்கிறதே?” என்று பெரியார் கேட்டார்.

“அவர் அறிஞர், அய்யா. நான் கூத்தாடி” என்று ராதா சிரித்தார். “நீங்கள் மாளிகைக்கு (பெரியார் மாளிகை) போங்கள், அய்யா. நாங்கள் சரி பண்ணி விடுகிறோம். நாளைக் காலையில் எப்படியும் மாநாட்டை நடத்தி விடலாம்” என்று ராதா சொன்னார்.

பெரியாரும் கிளம்பி விட்டார்.

இரவில் சி.பி.சிற்றரசு எழுதிய “போர்வாள்” என்ற நாடகம் மாநாட்டில் நடந்தது. எம்.ஆர்.ராதா நடித்தார். அதில் நடிக்க வேண்டிய சிற்றரசு வந்து சேரவில்லை. அவருக்குப் பதில் அண்ணா நடித்தார். நாடகத்தில் இல்லாத உரையாடல்களை ராதா பேச, அண்ணாவும் அதற்குச் சரியாக சுவையாகப் பேச, அரங்கில் ஒரே ஆரவாரம்!

நன்றி : அ.மா.சாமி

Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: