அனிபாவின் எடுப்பான குரலும், பாடல்களின் பகுத்தறிவுக் கருத்துக்களும் அண்ணாவுக்கு மிகவும் பிடித்து விட்டன. தான் கலந்துக் கொண்ட கூட்டங்களுக்கு அனிபாவை அழைத்தார், அண்ணா. இருவருக்கும் பாசப் பிணைப்பு இறுகி வந்தது.
அடுத்த கூட்டம் அரியலூரில் நடந்தது. அண்ணா பேசினார். அனிபாவுக்கும் அழைப்பு வந்தது, போயிருந்தார்.
கூட்டம் தொடங்குமுன், அந்துவான் என்ற இளைஞர் பாட விரும்புவதாக அண்ணாவிடம் சொன்னார். “அனிபாவிடம் கேட்டுக்கொள்” என்று அண்ணா கூறினார். அனிபாவிடம் கேட்க, “சரி, பாடுங்கள்” என்றார். அந்துவான் மேடையேறி ஓரிரு பாடல்கள் பாடினார்.
இந்த அந்துவான் யார் தெரியுமா?
பிற்காலத்தில் திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்ற எஸ்.ஏ.அசோகன் !
நன்றி : அ.மா.சாமி