RSS

யானைகள் பலவிதம்

01 Nov

2712167345_a744af52a7temple-elephant

பாவம் வாயில்லாப் பிராணிகள். அதற்கு சைவயானை என்றும், வைணவ யானை என்றும், முஸ்லிம் யானை என்றும் மதச் சாயம் பூசி விடுகிறான் மனிதன். யானைக்கு ‘மதம்’ பிடிப்பது இதனால்தானோ? கவிஞர் வைரமுத்துவின் கவிதை நினைவில் வந்தது. இதோ அந்தக் கவிதை :

விலங்குகள் நம்மிலும்
மானமுள்ளவை

யானையின் காலில்
யானை விழுந்ததாய்த்
தகவல்கள் இல்லை

காட்டுக்குள்
மூட நம்பிக்கை இல்லை

அங்கே
நெருப்புக்கோழி கூடத்
தீ மிதிப்பதில்லை

மதம் பிடித்தலையும்
மனிதா

யானை தவிர
மற்ற விலங்கெதற்கும்
மதம் பிடித்ததுண்டா?

ஒரு
கிறிஸ்தவக்கிளி – இந்துப்புலி
சமணக்கொக்கு – பெளத்தப்பசு
சீக்கியச்சிங்கம் – மகமதியமான்

காட்டுக்குள் அடையாளம்
காட்ட முடியுமா?

vairamuthu

– கவிப்பேரரசு வைரமுத்து

 

One response to “யானைகள் பலவிதம்

  1. nagoorumi

    November 3, 2009 at 9:27 pm

    வைரமுத்துவின் கவிதையும் அருமை, யானைக்கு ’மதம்’ பிடிப்பது பற்றிய உங்கள் விளக்கமும் அருமை!

    அன்புடன்
    நாகூர் ரூமி

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: