RSS

30 Nov

“அன்பு கய்யும்,

அதிர்ச்சியான ஒரு தகவல் ஒன்று உண்டு. ரஹ்மானுடன் மண்டேலா இருப்பதாக நீங்கள் போட்டிருக்கும் புகைப்படம்தான் அது. ஓய், அது கோபி அன்னான்! வேறு யாரும் பார்த்து வெடைக்கும் முன்பாக உடனே Descriptionஐ மாற்றுங்கள்.

எதற்கும் இருக்கட்டும் என்று கோபி அன்னானின் புகைப்படத்தையும் இத்துடன் இணைத்திருக்கிறேன்! விக்கி? இதோ :
http://en.wikipedia.org/wiki/Kofi_Annan

காமெடி பண்ணுவதற்கு அளவே இல்லையா? விட்டால் காந்தியுடன் ரஹ்மான் இருக்கும் புகைப்படம் போடுவீர்கள் போலிருக்கிறதே!”

ஆபிதீன்

இந்த கடிதம் ஆபிதீன் ‘அன்னான் கோபி’த்துக்கொண்டு எழுதியது. அவருடைய பதிவுக்கு நிறைய பின்னூட்டம் வரும். எனக்கு யாருமே எழுதுவதில்லை. இப்படியாவது ஒரு கமெண்ட் வந்ததே என்று எனக்கு அநியாயத்திற்கும் சந்தோஷம் வந்தது.

என்னிடம் ஒரு அரபி சொன்னார். “குல்லு ஹிந்தி சேம் சேம் ஷகல்” என்று. அவருடைய கண்ணுக்கு இந்தியர்கள் அனைவரும் ஒரே மாதிரியாகத்தான் தெரிகிறார்களாம். நம் கண்ணுக்கு சீனாக்காரர், கொரியாக்காரர், ஜப்பான்காரர், பிலிபினோ எல்லோரும் ஒரே மாதிரியாகத் தெரிவதில்லையா?

என் கெட்ட நேரம் நெல்சன் மண்டேலாவும், அண்ணன் கோபி அவர்களும் சாரி கோபி அன்னானும் ஒரே மாதிரியாகத் தெரிந்திருக்கிறார்கள். என் பதிவிலும் விதி விளையாடி விட்டது. கடைசியாக ஆபிதீன் அன்னானிடம் இப்படி வாங்கி கட்டிக் கொள்ள வேண்டியதாகி விட்டது.

விக்கிபீடியாவிலிருந்து அந்த அண்ணாவின் போட்டோவைக் காண்பித்து “இவர்தான்யா அந்த ஆளு. இதோ பாரு ஆதாரம்” என்று சொல்லுமளவுக்கு என்னுடைய பொது அறிவு வீக்காகி விட்டதே என்று நொந்து போய் விட்டேன்.

நல்லவேளை இந்த படத்தை ரஹ்மான் அண்ணா பார்த்திருக்க மாட்டார் என்று நம்புகிறேன். பார்த்திருந்தால் “மண்டேலாவுக்கும், கோபி அன்னானுக்கும் வித்தியாசம் தெரியாத நீ எல்லாம் ஒரு மனுஷனா?” என்று கிடாராலேயே என் மண்டையில் ஒரு போடு போட்டிருப்பார்.

நன்றி ஆபிதீன். என் கண்ணுக்கு பாருக் அப்துல்லாவுடைய பேரன் உமர் அப்துல்லாவும், இந்திராகாந்தியின் பேரன் ராஹுல் காந்தியும் ஒரே மாதிரியாகவே தெரிகிறார்கள். மறுபடியும் ஏதாவது சொதப்பி விடுவேனோ என்று மனது திக்திக் என்று அடித்துக் கொள்கிறது.

நாகூர் பாஷையில் சொல்ல வேண்டுமெனில் “அல்லா வச்சு காப்பாத்த!!!!”

 

9 responses to “

 1. ஆபிதீன்

  November 30, 2009 at 1:11 pm

  ‘மண்டேலா’ கையும் அவர்களுக்கு…

  உங்கள் பதிவில் பின்னூட்டமிட்டால் வருத்தப்படுவீர்களோ என்று நினைத்துதான் தனியாக மெயில் போட்டேன். என்ன துணிச்சலும் நேர்மையும் இருந்தால் அதையும் உங்கள் பதிவில் உடனே போடுவீர்கள்! வாழ்க உமது குறும்புகள்!

   
 2. nagoori

  November 30, 2009 at 5:11 pm

  இதை படித்துவிட்டு எனது ஆத்மார்த்த ரசிகர் ஒருவர் போன் செய்தார். நான் இந்த தவறை வேண்டுமென்றேதான் செய்தேனாம். வெறுமனே ஒரு சர்ச்சை கிளப்பி கவனத்தை ஈர்ப்பதற்காக இப்படி ஒரு குசும்பு விளையாட்டாம். அப்போதுதான் நிறைய பின்னூட்டங்கள் வருமாம்.

  அடப்பாவிகளா! உண்மையிலேயே ஒரு முட்டாள்தனமான காரியம் செய்தால்கூட “இல்லை இல்லை, நீ அறிவாளிதான்” என்று நம்பும் இந்த உலகத்தை எப்படி திருத்துவது?

   
 3. அ. முஹம்மது இஸ்மாயில்

  December 1, 2009 at 9:10 am

  அப்ப அது மண்டேலா அல்லவா?

   
 4. nagoori

  December 1, 2009 at 6:49 pm

  இந்த மண்டேலா பிரச்சினையினால் நான் மண்டையைப் பிய்த்துக்கொண்டதுதான் மிச்சம்.

   
 5. Saleem

  December 1, 2009 at 9:42 pm

  Shakespeare’s Romeo and Juliet, 1594:

  What’s in a name? that which we call a rose
  By any other name would smell as sweet;

   
 6. kabeer

  December 1, 2009 at 11:54 pm

  I know oneday you do this kind of mistake,thats why we always telling you read current news.but you read only 10 year old magazine! we can’t forget the death news of Mr.Netunchezhian!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! Ahahahahaaaaa

   
 7. nagoori

  December 2, 2009 at 12:12 am

  Long Live Mandela. It’s you who brought so many comments to my blog.

   
 8. அ. முஹம்மது இஸ்மாயில்

  December 3, 2009 at 5:04 am

  ஆனா நீங்க என்னா வேண்ணா சொல்லுங்க
  நான் ஒத்துக்கவே மாட்டேன்

  மண்டேலா…. ங்கறது
  ரொம்ப ரொம்ப
  நல்ல பேரு

  இதை மாதிரி
  இன்னும் எனக்கு தெரிஞ்சு
  6 பேரு வைக்கலாம்..

  டியுஸ்டேலா, வெட்னஸ்டேலா,…
  இப்படி போவுது
  மத்த பேரெல்லாம்..

   
 9. nagoori

  December 3, 2009 at 11:32 am

  (மண்டையில் அடித்துக் கொண்டு) எனக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்.

  மனசாட்சி : யோவ்! உனக்கு எத்தனை தடவை சொன்னேன். Up-to-date உலக விஷயங்களையெல்லாம் தெரிஞ்சு வச்சுக்கன்னு. கேட்டியா? இப்ப நல்லா அனுபவி.

  (பிகு: கண்ணை மூடினாலே, “லா..லா.. சரசுக்கு லா..லா.. ” இந்த பாட்டுதான் மண்டையிலே ஓடுது)

   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: