RSS

நாகூர் – தனி மாநிலம்

12 Dec

இப்பல்லாம் உண்ணா விரதம் இருந்தா உடனே தனி மாநிலத்தைக் கொடுத்திடறாங்க. நண்பர் சலீம் சொல்ற மாதிரி வருங்காலத்துலே மதுரை மாநிலம், சிவகங்கை மாநிலம், விருதுநகர் மாநிலம்னு வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. நாகூர்காரங்க ஒண்ணா சேர்ந்து தனி மாநிலம் கேட்டா எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணி பார்த்தேன்.

நம்ம ஜனங்க ரமலான் நோம்பு, ஆறு நோம்பு, அரஃபாத் நோம்பு, ஆஷூரா நோம்புன்னு உண்ணா விரதம் இருந்து பழக்கப்பட்டவங்க வேற. ஆந்திராவிலே ஒரு ஆளு உண்ணாவிரதம் இருந்தே மத்திய அரசுக்கு பேதி மாத்திரை கொடுத்துட்டாரு. அப்படியிருக்க நம்ம ஊருலே எல்லாரும் சேர்ந்து உண்ணா விரதம் இருந்தா நிச்சயம் தனி நாகூர் மாநிலம் தாராளமாக கெடச்சுடும்,

அலங்கார வாசலை தலைநகர் ஆக்கிடலாம்.  நாகூர் தர்கா ஆபிஸை தலைமைச் செயலகம் ஆக்கிடலாம். கூட்டு பாத்திஹா கட்டடத்தை ஹைகோர்ட் ஆக்கிடலாம். நூர்சா தைக்கா – அதை ஏர்போர்ட் ஆக்கிடலாம். (ஒருகாலத்துலே அங்கே காலி கிரவுண்ட் இருந்துச்சு. இப்ப இருக்குதான்னு தெரியலே)

அரசு கோப்புகள் எல்லாம் நாகூர் பாஷையிலேயே இருக்குமே! சூப்பரா இருக்கும். ஏன் கோர்ட்டுலே வழக்காடுவதுகூட நாகூர் பாஷையிலேயிலேதான் இருக்கும்.

“ஜனாப் ஜட்ஜ் மாமா அவர்களே! என் சாட்சிக்காரஹ வாஞ்சூர்லே போயி கள்ளுக்குடிச்சிட்டு வந்து, ஆட்டம் போட்டு தவுடு பண்ணுனாஹன்னு எந்த எரிச்சக்கார பொறிச்ச முட்டையோ, சும்மாச்சுக்காச்சும் ஒண்ணுக் கெடக்க ஒண்ணு பழியை போட்டு,  ஓசடி செஞ்சு அஹலெ எடக்கு மொடக்கா முசீபத்துலே மாட்டி உட்டுட்டாஹா” ன்னு வக்கீல்கள் வாதாடுவதைக் கேட்க காதில் குலாப்ஜான் ஷீரா பாய்ந்தது போலிருக்கும்.

இந்தியாவுக்கு தேசிய பறவை மயில், தேசிய விலங்கு புலி என்று சொல்லுவதைப்போல  நாகூர் மாநிலத்துக்கு மாநிலப் பறவை தர்கா புறா என்றும்  மாநில விலங்கு தர்கா யானை என்றும் அறிவித்து விடலாம். நேஷனல் பார்க்? வேறு என்ன தர்கா தோட்டம்தான். பாவுட்டாதான் நம்ம மாநிலத்துக் கொடி. அரசவைக்கவிஞரா என் நண்பர் இதயதாசனையே போட்டு விடலாம். முஸ்லீம் சங்க தொண்டர் படையையே காவல்துறை அதிகாரிகள் ஆக்கி விடலாம்.

நாகூர் டூரிஸ்ட் ஸ்பாட் ஆகிவிட்டதால் வருமானத்து குறைவிருக்காது. ஓலைப்பெட்டி, தடுக்கு, விசிறி பட்டரை இவைகளை பெரிய தொழிற்கூடங்கள் ஆக்கி ‘ஆஹோ ஓஹோ’வென்று ஏற்றுமதி செய்யலாம். இருக்கவே இருக்கிறது நாகூர் சில்லடி துறைமுகம். நம்ம ஊருக்காரங்க வெளிநாட்டுலே அதிக அளவிலே இருக்குறதுனாலே அந்நிய செலவாணிக்கு குறைவிருக்காது,

உடையிலே கூட நமக்கென்று ஒரு தனித்தன்மையைக் காட்ட முடியும். ஆண்கள் கைலி சட்டை, பெண்கள் பத்தை கைலி, மல்லியப்பட்டீசு தாவணி. பெண்கள் எல்லோரும் யூனிபார்மா வெள்ளை துப்பட்டி போட்டுக்கிட்டு போறதை பாத்து பி.பி.ஸி. காரங்ககூட ஆச்சரியப்பட்டு போயிடுவாங்க. (டைரக்டர் சேரன் கவனத்திற்கு)

என்ன சொல்றீங்க? தனிமாநிலம் கேக்குற ஐடியா இருந்தா சொல்லுங்க. உண்ணா விரதத்தை ஆரம்பிச்சுடலாம்.

 

7 responses to “நாகூர் – தனி மாநிலம்

  1. Muhammad Ismail .H, PHD,

    December 12, 2009 at 2:07 am

    ஐடியா என்னமோ சூப்பராதான் இருக்கு ! ஆனா இந்த பொண்டுவ யூனிபார்ம் தான் இடிக்குது. பத்தை கைலி, மல்லியப்பட்டீசு தாவணி. வெள்ளை துப்பட்டி இப்ப விக்கிற வெல உங்களுக்கு தெரியுமா?

     
  2. Muhammad Ismail .H, PHD,

    December 12, 2009 at 2:14 am

    அப்பறம் தேசிய மரம் , பாய்மரம் (பாம்பரம்) என்ன சரியா?

     
  3. Muhammad Ismail .H, PHD,

    December 12, 2009 at 2:19 am

    // அலங்கார வாசலை தலைநகர் ஆக்கிடலாம். நாகூர் தர்கா ஆபிஸை தலைமைச் செயலகம் ஆக்கிடலாம். //

    ஒத்துமைக்கு “பேர் போன ” தவ்ஹீதுவாதிகள் இதுக்கு ஒத்துக்குவாங்களா? நம்ம ஊருக்கு ஜமாத் அலுவலகமே ஒரு கையின் விரல்களை விட அதிகமாச்சே ?

     
  4. haja

    December 15, 2009 at 1:46 pm

    Really interesting..!!
    If Nagore will be seperate state,
    Who will be Chief Minister?
    Who will be Education Minister?
    Who will be Opponent party?
    who will be collector?
    who will be IG?

     
  5. haja

    December 15, 2009 at 1:51 pm

    UNNA VIRATHAHUKU NAN READY?
    BUT NAGORE BIRIYANI, 5 VAGAI SORU, VADA, UPPU ROTTI, KOTTHU PROTA, KOTHUMAI KANJI, PAAL SARWATH.. ITHELLAM KIDAIKUMA?

     
  6. Kilakarai Citizen

    December 16, 2009 at 11:06 pm

    If Nagore will be independent State
    CM to be Judge MMI
    Education Minister to be Nagoor Roomi
    Opponenet Party Cheif : Abideen Nana (Kaka)
    Collector :Alaudeen ?
    IG : Jaffer Seit?
    Choice OK aa?

     
  7. abideen

    July 4, 2012 at 1:14 am

    ohooo super

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: