ஒசாமா பின் லாடனை அல்லாமா இக்பால் கவிதை பாடியிருக்கிறார் என்று நான் சொன்னால் யாரும் என்னை நம்ப மாட்டார்கள் என்பது நன்றாகவே எனக்குத் தெரியும். அவருடைய காலம் வேறு, இவருடைய காலம் வேறு, இப்படியிருக்க இவரைப் பற்றி அவர் எப்படி பாடல் இயற்றியிருக்க முடியும் என்று வாசகர்கள் என்னை எள்ளி நகையாடலாம். டாக்டர் அல்லாமா இக்பாலின் தீர்க்கதரிசன சிந்தனைகளுக்கு இவ்வரிகள் ஒரு நல்ல எடுத்துக்காட்டு எனலாம் :
முல்லாக்கள் சிலர் மக்களைத் தவறான வழியில் இட்டுச் செல்கிறார்கள். இறைவனின் பெயரால் இஸ்லாம் எனும் உயரிய மார்க்கத்திற்கு களங்கம் விளைவிக்கிறார்கள் என்ற காரணத்தினால் அவர்களின் மீது மகாகவிக்கு தீராத கோபம் பொங்கி வழிகிறது.
இதோ அவரது வரிகளைக் கேளுங்கள் :
“முல்லாக்கள் சொர்க்கத்துப் போக வேண்டும்
என்று இறைவன் பணித்தான்
நான் அங்கே இருந்தேன்
அதைக் கேட்டதும் என் நாவை
அடக்க முடியவில்லை
“இறைவா!” என்னை மன்னித்துக்கொள்
முல்லாவை சொர்க்கத்துக்கு அனுப்பாதே
அவருக்குப் பெண்டு பிள்ளை தேவையில்லை
காடு கழனி தேவையில்லை
அவருக்கு வேண்டியது சண்டையும் சச்சரவும்
பொய்யும் புளுகும்
அறியாத மக்களை ஏமாற்றுவதே அவர் வேலை,
சொர்க்கத்தில் கோயில் இல்லை;
பள்ளிவாயில் இல்லை;
பொய்யும் புளுகு மில்லை;
ஏமாறும் மக்களே இல்லை!
எனவே அவருக்கேற்ற இடம் அதுவல்ல
என்று பணிவுடன் மெதுவாகக் கூறினேன்”
கவிஞர் இக்பால் தன் கருத்தைக் கூட சற்று மெதுவாகத்தான் கூறுகிறார். காரணம் என்ன தெரியுமா? உரக்கமாக அவர் கூற, அது அந்த முல்லா காதில் விழ அங்கேயே நம் கவிஞரை துப்பாக்கி எடுத்து சுட்டுவிட்டால் என்னாவது?
மற்றுமொரு இடத்தில் அவர் கூறுவதைக் கேளுங்கள்:
“மத ஆர்வமுள்ள மக்களைப் பார்த்து
‘நீங்கள் மதமற்றவர்கள்’ என்று
கூறுவது இந்த முல்லாக்கள் வேலை
இறைவன் பெயரால் கஷ்டம்
விளைவிப்பதே இவர்களது வேலை”
அல்லாமா இக்பால் முல்லாக்கள் என்று குறிப்பிட்டுக் கூறுவது பின்லாடன் அல்லது பைத்துல்லா மஸ்வூத் ஆகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அது சங்பரிவார் தலைவர்களாகக் கூட இருக்கலாம்.
– அப்துல் கையூம்
Thaz
February 9, 2010 at 8:49 pm
//அல்லாமா இக்பால் முல்லாக்கள் என்று குறிப்பிட்டுக் கூறுவது பின்லாடன் அல்லது பைத்துல்லா மஸ்வூத் ஆகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை//
Asslamu alaikum Brother,
How can you judge a muslim by his appearance or based on the main stream media information. Though I am not supporter of the above mentioned people.
Abdul Qaiyum
February 9, 2010 at 9:15 pm
I totally agree with you brother. Noone can judge someone’s deeds by his appearance. HE knows everything. I have just quoted the words of Dr.Allama Iqbal whose poems are regarded very high in the Islamic world. Allah has not given permission to take anyone’s life. Who knows? An unbeliever may become a believer at later stage.
Same as you, I also dislike those who bring badname towards our religion in the name of Allah. This is just my opinion. Each readers may have their own opinion. Thanks for sharing your views.