RSS

நாகூர் பிச்சைக்காரி

17 Feb

[நாகூரில் பெரிய அளவில் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் இல்லை, பியூட்டி பார்லர்கள் இல்லை, ரவ்லான், கிறிஸ்டியன் டியோர் போன்ற முகப்பூச்சு சாதனங்கள் விற்கின்ற ஷோரூம்கள் இல்லை என்பது உண்மைதான். நம்ம ஊர் மாடர்ன் ஆகிக் கொண்டிருக்கின்ற இவ்வேளையில் இந்த கதை, தாய்க்குலங்கள் அவரவர் கணவன்மார்களிடம் ஒப்பனையின் அவசியத்தை எடுத்துச் சொல்ல பிரயோஜனமாக இருக்கும்]

நாகூரில் ஒரு பிச்சைக்காரி அலைந்துக் கொண்டிருந்தாளாம். அழுக்கடைந்த உடை. நிறைய கிழிசல்கள். அங்குமிங்கும் ஒட்டுப்போட்டத் துணி.பல நாட்கள் குளிக்காததினால் முடி இறுகிப்போய் ஜடாமுடியாய் மாறியிருந்தது. அவள் மேனியெங்கும் துர்நாற்றம்.

இப்படிப்பட்ட ஒரு பெண்ணை போய்ச் சந்திக்கிறார் அந்தப் பெண்மணி. பெண்மணியின் பெயர் நமக்கு இங்கு  தேவையில்லாதது. அவர்களுக்குள் நடந்த உரையாடல் இது.

“இந்தா புள்ளே! உன்னை பாக்க ரொம்ப பாவமா இக்கிது. இப்ப நா ஒனக்கு 2000 ரூவா தர்றதா வச்சுக்க. அந்த பணத்தெ வச்சு என்ன பண்ணுவே? ஷாப்பிங் போவியா?”

“நல்லா இருப்பீங்க நாச்சியா! கொடுத்தா ஷூக்ர் செய்வேன். அடுத்த வேளை சாப்பாட்டுக்கே நா லாட்டரி அடிக்கிறேன். இந்த லட்சனத்துலெ நா எங்கே ஷாப்பிங் போறது?”

“அது போவட்டும். இந்த பணத்தெ வச்சு பியூட்டி பார்லராவது போவியா?”

“அது ஒண்ணுதான் எனக்கு கொறச்ச பாருங்க. நானாவது பியூட்டி பார்லர் போவதாவது?”

“சரி. இந்த பணத்துலெ, மேக்கப் சாமானாவது வாங்கி பூசிக்கிவியா?”

“ஏம்மா! வெளையாடுறீங்களா? நா இருக்குறா நெலமையிலே இதெல்லாம் எனக்குத் தேவையா?”

“நா ஒண்ணு கேக்குறேன் அதுக்காவது ஒத்துக்குவியா?”

“சொல்லுங்க நாச்சியா! நா என்ன செய்யணும்?”

“நாளைக்கு எங்களுக்கு Wedding Day. நானும் என் வூட்டுக்காரஹலும் காரைக்காலுக்கு ஒரு பெரிய ஹோட்டல்லே டின்னர் சாப்பிட போறோம். நீயும் எங்க கூட வர்றியா?”

“ஏம்மா! நானே அழுக்குப் புடிச்சு பாண்டே மாதிரி இருக்கிறேன், இந்த லட்சணத்துலே என்னையும் உங்க கூட கூட்டிக்கிட்டு போறேன்னு சொல்லுறிங்களே, எதுக்கும்மா?”

“அது வேற ஒண்ணுமில்லே புள்ளே. ஒரு பொம்பளெ மேக்கப் போடாம, பியூட்டி பார்லர் போகாம, ஷாப்பிங் போவாம இருந்தா எப்படி நாறி நறக்குலைஞ்சி போவான்னு என் வூட்டுக்காரஹலுக்கு காட்டணும் அதுக்காகத்தான் உன்னை என்கூட வரச் சொல்றேன்.”

????????????????

 

3 responses to “நாகூர் பிச்சைக்காரி

  1. Unni Krishnan

    February 17, 2010 at 11:07 pm

    QAIYUM SIR,
    NAGOOR MAN VASANAI ROMBA THOOKKAL

     
  2. kabeer

    February 18, 2010 at 3:57 pm

    Qaiyum kaka, ” Enna anubavam pesutha” ! Sorry Ezhuthudha ?

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: