RSS

நாகூர் மராத்தியர்களுக்கே சொந்தம் – பால் தாக்கரே ஆவேசப் பேச்சு

17 Feb

இன்று (புதன் 17), NDTV தொலைக்காட்சிக்கு அளித்த சூடான பேட்டியில் தமிழ்நாட்டில் இருக்கும் நாகூர் மராத்தியர்களுக்கே சொந்தம் என்றும் அவ்வூரை மஹாராஷ்டிரா மாநிலத்துடன் இணைக்க வேண்டுமென்றும் சிவசேனத் தலைவர் பால்தாக்கரே மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தி நடிகர் ஷாரூக் கான் நடித்து வெளிவந்த ‘மை நேம் இஸ் கான்’ திரைப்படம் தொடர்பாக பெரும் சர்ச்சை ஏற்படுத்திய சிவசேனைத் தலைவரின் இந்த தொடர் அதிரடி பிரகடனம் தமிழகமெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்துக்கு தமிழக அரசு எப்படி பதிலளிப்பது என்று ஆலோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் நாகூர் மக்களிடையே இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக முன்னாள் நாகூர் தர்கா அட்வைஸரி போர்ட் உறுப்பினர் கவிஞர் இதயதாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “சிவசேனைத் தலைவருக்கு ‘பால் தாக்கரே’ என்ற பெயரை யார் வைத்தார்களோ தெரியவில்லை. அவர் தொடர்ந்து எல்லோரையும் “தாக்குறார்” என்று கருத்து தெரிவித்தார். அவருடைய இந்த அநியாய உரிமைக்கோரலுக்கு உடனே மத்திய அரசு தலையிட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று கெஞ்சிக் கதறி கேட்டுக் கொண்டார்.

சிவசேனைத் தலைவர் பால்தாக்கரே அளித்த அறிக்கையின் முழு விவரம் பின்வருமாறு:

தஞ்சையை ஆண்டு வந்த மராத்திய மன்னர்கள் நாகூர் தர்காவை விரிவு படுத்துவதற்கு ஏராளமான நிதியுதவிகள் செய்துள்ளார்கள். 18-ஆம் நூற்றாண்டில் மிகச் சிறிய கட்டிடங்களாக காணப்பட்ட நாகூர் தர்காவை விரிவுபடுத்தி, மராட்டிய மன்னன் பிரதாப் சிங் நிர்மாணித்துள்ள வானை முட்டும் மினாரா இதற்கு சாட்சியாக அமைந்துள்ளது. பிரதாப்சிங் தர்காவின் பராமரிப்பிற்கு 15 கிராமங்களை மானியமாக அளித்ததை கல்வெட்டுச் செய்தி ஒன்று கூறுகிறது. இந்த கட்டிடங்களுக்குப் பின்னால் மராத்தியர்களின் உணர்வும், வீரமும் இரண்டறக் கலந்துள்ளது. எனவே நாகூரை உரிமை கொண்டாட எங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. மராத்திய மாமன்னர் சத்திரபத் சிவாஜியின் வழி வந்த வீர மறவர்களாகிய நாங்கள் ஒருபோதும் எங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம். மேலும், இந்த சரித்திரப் பின்னணி சரத் பவார், விலாஸ்ராவ் தேஷ்முக், சுசில் குமார் ஷிண்டே, பிரிதிவ்ராஜ் சவாண், முரளி டியோரா, புரபுல் படேல் போன்றவர்களுக்கு தெரிந்திருக்க நியாமில்லை என்றும் அவர்கள் ‘இத்தாலி இளவரசர்’ ராகுலுக்கு கூஜா தூக்கத்தான் லாயக்கு என்றும் பால்தாக்கரே வெளியிட்ட அறிக்கையை அவரது ‘சாமனா’ பத்திரிக்கை முன்பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

(பால்தக்கரே செய்யும் கூத்துகளைப் பார்க்கும்போது இதுபோன்ற செய்திகள் உண்மையிலேயே வெளிவந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை)

Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: