RSS

அபூர்வ தகவல்களும் என் கமெண்டும்

24 Feb

 

[பறவைகளைப் பற்றியும், விலங்குகளைப் பற்றியும் அபூர்வமான சில தகவல்களை நண்பரொருவர் திரட்டி அனுப்பியிருந்தார். தகவல்கள் என்னமோ சுவையாகத்தான் இருந்தது. எல்லாவற்றையும் கமெண்ட் அடிக்கச் சொல்லும் கோணல்புத்தி இதற்கும் அடிக்கச் சொன்னது. நண்பர் அனுப்பி வைத்த தகவல்களும் என்னுடைய கமெண்டும்.]

“டால்பின்கள் தூங்கும் போது கண்கள் திறந்திருக்கும்”.

இந்த மாதிரி திறமை மனிதர்களுக்கும் இருந்தால் எவ்வளவு நல்லது. ஆபீஸில் மானேஜருக்கு எதிரிலேயே ஜாலியாக தூங்கலாமே!

“நாய்கள் பத்து விதமாக குறைக்கும் ஆற்றல் பெற்றது”

டைரக்டர் ராஜ்குமாருக்கு இது தெரிந்தால் ‘அசத்தப் போவது யாரு?’ நிகழ்ச்சியில் மிமிக்ரி ஆர்ட்டிஸ்டாக சேர்த்துக் கொள்வார்.

“பூனைகள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் தூங்குகிறது”.

என் மைத்துனர் மாத்திரம் என்னவாம்? (இறைவா! இதை என் மனைவி படிக்காமல் இருக்க வேண்டும்)

“ஆந்தையினால் மட்டும் நீலநிறத்தை அடையாளம் காண முடியும்”

இதை சென்ஸார் போர்டில் நியமித்தால் என்ன? நல்ல படம் எது? புளு பிலிம் எது? என்று எளிதில் கண்டுபிடித்து விடுமே!

“கலிபோர்னியாவில் வாழும் ஒரு வகை மீனுக்கு கண்களே கிடையாது”.

இதில் என்ன ஆச்சரியம் வேண்டிக் கிடக்கு? நம்ம அரசியல்வாதிகள் சிலருக்கு மூளையே கிடையாதே!

“மூளையில்லாத மீன் நட்சத்திர மீன்கள் ஆகும்”.

கரெக்ட். அரசியல்வாதிகள் நட்சத்திர அந்தஸ்த்து உடையவர்கள்தானே?

“தேளுக்கு பத்து கண்கள் உண்டு. இருப்பினும் பார்வைத் தெளிவாக இருக்காது.”

நம்ம ஆளுங்க சில பேரு பகல் நேரத்தில் கார் ஓட்டுவார்கள். நாலு கண்கள் இருக்கும் (அதாவது மூக்கு கண்ணாடி வேறு போட்டிருப்பார்கள்) கடைசியில் தாறுமாறாக பிளாட்பாரத்தில் போய் ஏற்றி விடுவார்கள்.

“நெருப்புக் கோழிக்குப் பற்கள் இல்லாததால், சாப்பிட்ட உணவு செரிப்பதற்காக சிறுசிறு கற்களை விழுங்கும்”

அப்புறமா கற்கள் செரிப்பதற்காக எதை விழுங்கும் என்று சொல்லவே இல்லையே?

“சிவப்பாக வியர்வை சிந்தும் விலங்கு நீர்யானை.”

நல்லவேளை நமக்கு இப்படி கிடையாது. வெயிலிலே அலைந்து விட்டு வீட்டுக்கு வந்தால் மகன் ரத்தக்களறியாக வந்து நிற்கின்றானே என்று என் தாயார் துடிதுடித்து போய் விடுவார்.

“முட்டையை முதன்முதலாக உணவுப் பொருளாகப் பயன்படுத்தியவர்கள் எகிப்தியர்கள்”.

அது போகட்டும். ஆத்திரம் வந்தால் அழுகிய முட்டைகளை எடுத்து வீச பயன் படுத்தியது யார் என்று சொல்லவே இல்லையே?

 

Tags: , , , ,

3 responses to “அபூர்வ தகவல்களும் என் கமெண்டும்

 1. haja

  February 25, 2010 at 9:59 am

  ஹா.. ஹா…முடியல நானா…

   
 2. haja

  February 25, 2010 at 10:02 am

  எனது ஆபிஸில் உங்களது வலைத்தளங்களை பார்வையிடும் போது சிரிக்காமல் இருக்க முடியல. எனது boss வேறே முறைக்கிறார். இதுக்கு ஒரு வழி சொல்லுங்களேன்.

   
 3. Abdul Qaiyum

  February 25, 2010 at 11:11 am

  பேசாமல் உங்க பாஸையும் என் வலைத்ததளத்தை பார்க்கச் சொல்லுங்கள். ரெண்டு பேருமா சேர்ந்து சிரிச்சிக்கிட்டு இருக்கலாம். (ஆபீஸ் வேலை அப்ப யார்தான் பார்க்குறது என்கிறீர்களா? அதுவும் சரிதான்) ஒரு பழமொழி ஞாபகத்திற்கு வந்தது. கழுதைக்கு முன்னாடியும் பாஸுக்கு முன்னாடியும் போய் நிற்கக் கூடாதாம்.

   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: