RSS

லக்கி லுக்கின் அவுட்லுக்

27 Feb

வலைப்பதிவாளர் திரு,யுவ கிருஷ்ணா (லக்கி லுக்),  ஷாரூக் கான் நடித்த “மை நேம் இஸ் கான்” இந்திப்படத்திற்கு தன் மனதில் பட்ட கருத்துகளை விமர்சனமாக எழுதியிருந்ததை என் வலைத்தளத்தில் மீள்பதிவு செய்திருந்தேன். இதை படித்தபோதே அவருக்கு நிச்சயம் பின்விளைவுகள் வருமென்று எதிர்பார்த்தேன். நினைத்தது போலவே ராமனுஜம் வரதன் என்ற நபர் வசைபட அதற்கும் சரியான பதிலடி கொடுத்திருக்கும் அவரது துணிச்சலை பாராட்டி அவரது முதுகில் செல்லமாக அடித்து ‘சபாஷ்’ போட வைத்தது மனது.  

மை நேம் இஸ் கான் – எதிர்வினை

February 25, 2010

Hi,
I do not know why you guys always support Muslims in the first place.

If the same movie has been taken by a Hindu, will you appreciate?
Immediately, You and Your groups will start writing about SECULARISM

Have you ever written about those hindus who are staying in Pakistan and do not have rights to vote also?

Think man. Think and write before you think again.

During mogul period what has happened to our country. Imagine.
Go and read the books. You will know the truth.

Sooner the entire India will be converted to Islam and Christianity.
Do not worry. Your kid and my kid will do a research on Hinduism just like Americans are doing about Greeks and Latin. But they are the one burried those civilization.

Bye

Regards
Ramanujam Varaddhan

* – * – * – * – * – * – * – * – *
யுவகிருஷ்ணாவின் பதில்

வணக்கம் திரு ராமானுஜம் வரதன்!

இப்படம் ஒரு இந்து இயக்குனரால்தான் இயக்கப்பட்டிருக்கிறது. நாயகனை தவிர்த்து படத்தில் பணிபுரிந்த பெரும்பாலானோர் இந்துக்களே.

முகலாயர் காலத்தில் ‘இந்தியா’ என்றொரு நாடே கிடையாது. இன்று இருக்கும் அமைப்பு கூட பரஸ்பர நலன் சார்ந்த ஒரு கூட்டமைப்பு மட்டுமே. இங்கே பரஸ்பர நலன்கள் மறுக்கப்படுவதுதான் தெலுங்கானா, நக்சல்பாரி உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கிறது.

நீங்கள் அஞ்சுவதைப் போல இந்நாடு ஒட்டுமொத்தமாக இஸ்லாமியத்துக்கோ, கிறிஸ்தவத்துக்கோ மாறக்கூடிய வாய்ப்பு எக்காலத்திலும் இல்லை. சுதந்திரம் அடைந்தபோது இங்கிருந்த மத விகிதாச்சாரம் அப்படியேதான் இருக்கிறது. இன்னும் பார்க்கப்போனால் இந்துக்களின் சதவிகிதம் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது.

சிந்திக்க வேண்டியது நானல்ல. நீங்கள்!

அன்புடன்
யுவகிருஷ்ணா

 

Tags: , , ,

4 responses to “லக்கி லுக்கின் அவுட்லுக்

 1. haja

  February 28, 2010 at 10:26 am

  with reference to mr.yuvakrishna reply to mr.ramanujam,
  india never changes to islam and christian country even hindu country also. he forget to say india never changes to “hindu country” also. bcos india is Democracy Country.

   
 2. nagoorumi

  February 28, 2010 at 10:36 am

  ஒரு நேர்மையான பதிவைக்கூட புரிந்து கொள்ள முடியாதபடி மதம் அறிவின் கண்களை மறைக்கிறது. ’மதம்’ பிடித்துவிட்டால் யாருக்குமே இப்படித்தான். யுவன் பதில் ரொம்பச் சரி.

  அன்புடன்
  நாகூர் ரூமி

   
 3. Abdul Qaiyum

  February 28, 2010 at 5:08 pm

  இந்தியாவை ஆண்ட முகலாயர்களில் யாரும் இஸ்லாத்தின் 5 கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் மேற்கொண்டதாக குறிப்புகள் இல்லை. இத்தனை நூறாண்டுகள் பரந்த இந்தியாவை ஆண்ட இவர்கள், நினைத்திருந்தால் இந்தியா முழுவதையும் முஸ்லீம் நாடாக ஆக்கியிருக்க முடியும். அவர்களுக்கு கேளிக்கை, கூத்து. வீண் ஆடம்பரம் இவற்றிலேயே நேரம் சரியாக இருந்தது (ஒரு சில மன்னர்களைத் தவிர).

  “Human Rights” – இதனை முழுதாக பேணியவர்கள் முகலாயர்களே என்று புகழ்கிறது BBC. அவர்கள் புரிந்த நல்ல காரியங்களையும் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. அடிமை வணிகத்தை ஒழித்தது, குட்டி, குட்டி இந்து ராஜ்ஜியங்களுக்கிடையே ஒற்றுமை ஏற்படுத்தியது, கலை, கல்வி. கலாச்சாரம் இவைகளின் மேம்பாட்டிற்கு அவர்கள் அளித்த பங்கு போன்றவைகளை குறிப்பிட்டுச் சொல்லலாம். இப்பொழுது காணப்படும் ‘இந்தியா’ என்ற பெயரில் உள்ளடக்கிய ராஜ்ஜிய வரைபடம் அவர்கள் காலத்தில் ஏற்பட்டதுதான்.

  எண்ணற்ற இந்துக் கோயில்கள் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது பாபருடைய காலத்தில்தான். பாபர் முதன்முதலாக டெல்லியைக் கைப்பற்றியவுடன் அவர் செய்த முதல் வேலை பசுவைக் கொல்ல தடைவிதித்தது. காரணம் இந்துகளின் மனது புண்படக்கூடாது என்பதற்காக.

  பாபர், ஹூமாயூனுக்கு எழுதியிருக்கும் ஓர் பட்டயம் இன்றுவரை இந்திய அரசின் தொல்லியல் துறையால் பாதுகாக்கப் படுகிறது. அதிலே கூறப்பட்டுள்ள வரிகளில் குறிப்பாக ஒருவரி. “மகனே! நாம் ஆட்சி புரியும் இந்த நாடு பெறும்பான்மை இந்து மக்கள் வாழும் நாடு. அவர்கள் பசுவை தெய்வமாக வழிபடுகிறார்கள். எனவே நீ (பக்ரீத் அன்று) குர்பானி கொடுக்கும் போது பசுமாட்டை அறுப்பதைத் தவிர்த்துக் கொள்!” என அவர் எழுதிய அந்த பட்டயத்தின் வரிகள் சிலவருடங்களுக்கு முன்பு தினத்தந்தியில் தொடராக வெளியான வரலாற்றுச் சுவடுகள் பகுதியில் தெளிவாக இடம்பெற்றிருந்தது.

  மார்க்க ரீதியாக அக்பர் ஒரு மோசமான முஸ்லீமாக இருந்தார், புதிதாக ஒரு மதத்தைத் தோற்றுவித்தார் என்பது எல்லோருக்குமே தெரியும். அக்பரின் ஆட்சியின் பெரும் பதவிகள் வகித்தவர்கள் அத்தனைபேரும் இந்துக்களே.

   
 4. Saleem

  March 4, 2010 at 8:18 pm

  சமீபத்தில் “My Name is Khan” படம் பார்க்க நேர்ந்தது, அதிக எதிர்பார்ப்போடு படத்தை பார்த்தால் ஒரு கமர்சியல் மசாலா படத்தை ஷாரூக் மதத்தின் துணைக்கொண்டு கேலிக்கூத்தாக்கி இருக்கிறார். உலகில் உள்ள அனைத்து முஸ்லீம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படும் போது இவர் மட்டும் தான் தீவிரவாதி அல்ல என நிலை நிறுத்தி ஒன்றும் ஆகி விட போவதில்லை.

  விஜய் போன்று ஹீரோயிசத்தை ஷாரூக் புதிய பரிமாணத்தில் முயன்று இருக்கிறார். முகமது, கான், பேரில் என்ன இருக்கிறது. முஸ்லீம் என்றாலே தீவிரவாதி என்று முத்திரை குத்தப்பட்டதால், நானோ, நீயோ இதிலிருந்து மீள முடியாது. நபிகள் நாயகத்தையே தீவிரவாதியாக சித்தரிக்கும் இந்த உலகத்தில் நாம் மட்டும் விதிவிலக்கா என்ன?

  ஒரு படத்தில் சந்தானம் ஒரு செய்யும் காமெடி சீனை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்,
  “அரசியல் பண்றவங்களை அரசியல்வாதின்னு கூப்பிடறாங்க. அப்ப கோயில்லே மந்திரம் சொல்றவங்களை ஏன் மந்திரவாதி என்று கூப்பிடக்கூடாது? என்பார்.

  அதே போல முஸ்லீம்களை தங்கள் மதத்தை தீவிரமாக பின்பற்றுவதால் ஏன் தீவிரவாதி எனக் கூப்பிடக்கூடாது என்று எனக்கு நானே சமாதானம் படுத்திகொள்வேன். தீவிரவாதி என்ற அடைமொழிஇ ந்தியாவில் வேறு யாருக்கும் கிடையாது, முஸ்லீமுக்கு மட்டும் தான். எந்த செய்தித்தாளைப் படித்தாலும், எந்த டிவி பார்த்தாலும் இதே நிலை தான்.

  முன்பெல்லாம் கறிக்கைடை பாய், சாம்பிராணி புகை போடுவராக காட்டி கொண்டு இருந்த சினிமா இன்று முஸ்லீம் என்றால் தீவிரவாதியாகவே சித்தரித்து கொண்டு இருப்பது வேதனை. ஜிப்பா, தலையிலே தொப்பி, கழுத்திலே தாயத்து, நெற்றியில் வடு, தோள் பட்டையில் துப்பாக்கி என விஜயகாந்த், அர்ஜுன், படத்தில் எல்லாம் தவறாமல் காணலாம், ஏன் உன்னை போல் ஒருவன் மட்டும் விதி விலக்கா என்ன?.

  ஆகவே இன்று முதல் நான் கூற போவது, “my name is Mohamed I don’t care what you think about me”

  MOHAMED SALEEM

   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: