RSS

ஹந்திரி

23 Apr

“ஹையும் நானா! ஹந்திரியைப் பத்தி ஏதாச்சும் எழுதுங்களேன்” என்று வாசகர் ஒருவர் அன்பு வேண்டுகோள் விடுத்திருந்தார். அது என்னமோ தெரியவில்லை. நாகூர்க்காரர்கள் பெரும்பாலோர் “க” உச்சரிப்பை “ஹ”வாக்கி உச்சரிப்புக் கொலை செய்கிறார்கள்.

அப்படித்தான் “(அப்துல்) கையூம்” என்ற என் பெயரை “ஹையும்” ஆக்கியும் “கந்தூரி”யை “ஹந்திரி” ஆக்கியும் மனமகிழ்கிறார்கள்.

இருசாரார்களுக்கும் உகந்த பிள்ளையாய் இருப்பதை அறிந்த இந்த வாசகர் நம்மை வம்பில் மாட்டிவிடப் போகிறார் என்பது மட்டும் “மை” போட்டு பார்த்த மாதிரி தெளிவாகத் தெரிந்தது.

ஏற்கனவே நான் வெளியிட்ட சில பதிவுகள் இங்கே :

நாகூர் – ஒரு வேடிக்கை உலகம்

அந்த 14 நாட்கள்

நாகூர் “புறா”ணம்

உண்டிமே நியாஸ் டாலோ

நாகூர் மொட்டை

கவிஞர் ஜபருல்லாவின் கவிதை நண்பர் ஆபிதீனின் தளத்திலிருந்து:

நாகூர் கந்தூரி

கைலிக் கடைகளின்
‘கட்-அவுட்’ திருவிழா..!

‘காதல் தேசம்’
‘காதல் கோட்டை’
புடவைகள் பெயர்கள்..!
பூரிப்பில் பெண்கள்…!

பாரின் சாமான்கள்
மோகத்தில் ஆண்கள்..!

ஹோட்டல் எங்கும்
விடாது ஒலிக்கும்
சட்டுவ சங்கீதம்
முட்டை புறாட்டா மணம்
மூக்கின் நுனியில்..!

கடலில் ஓடும்
கப்பல்கள்
தெருவில் ஓடும்
ஊர்வல விந்தை..!

வெடிகள் போட்டு
கொடிகள் ஏறும்
விமரிசையாக..!
நாகூர் கந்தூரி

இங்கு
இரவிலும் சூரியன்..!
மொழிகளை எல்லாம்
இரண்டறக் கலந்து
செவிட்டில் அறையும்
கேஸட் அலறல்கள்…!

‘மேட்-இன்’
செவ்வாய்க்கிரகம்
என்றும்
முத்திரை குத்தும்
வித்தைக்காரர்கள்..!

தர்ஹா உள்ளே
காணிக்கை எல்லாம்
உண்டியல் போட
கட்டளைக் குரல்கள்..!

பாதைகள் மறித்து
பாத்திஹா கடைகள்
தாயத்து டிசைன்கள்
விற்பனை அங்கு-
மொத்தமாகவும்
சில்லறையாகவும்..!

பால்டின் தகரத்தில்
சிற்ப வேலைகள்..!
அதை
வெள்ளியாய் மாற்றும்
ரசவாதக் கலைகள்..!

கஜல்கள் கவாலிகள்
நாட்டியத்தோடு
களி நடம் புரியும்
இளைஞர் கூட்டம்..!

கமிஷன் போக
மிச்சப் பணத்தில்
கரும் புகையோடு
வாண வேடிக்கை
கோலாகலங்கள்..!

பீர்சாபு எறியும்
எழுமிச்சைப் பழங்களில்
பிள்ளைவரத்தை
தேடும் பெண்கள்..!

சந்தனக் கூட்டில்
பூக்களை வீசிப்
பரவசப்படும்
பக்த கோடிகள்..!

‘ஐயா..தருமம்..!’
என்ற
அபஸ்வரத்தோடு
ஊரே நிறைந்த
பிச்சைக்காரர்கள்..

அவர்களுக்கு
சுகத்தைக் கொடுக்கும்
சோத்துச் சீட்டுக்கள்..!

இன்னும்
தொண்டற் படைகள்
உண்டியலோடு..!

இகபர உலகில்
நன்மைகள் வேண்டி
இரண்டே ரூபாயில்
ஆண்டவர் தரிசனம்..!

இந்த ஆராவரங்களின் மத்தியில் கூட –
அந்த –
மகானை –
நினைத்தும் – துதித்தும்
சில
மனித மனங்கள்…

-இஜட். ஜபருல்லாஹ்

Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: