RSS

இசைமுரசை நலம் விசாரித்தார் காயிதேமில்லத் பேரன்…

05 Jan

காயிதேமில்லத் அவர்கள், இசைமுரசு நாகூர் ஈ.எம். ஹனீஃபா மீது பேரன்பு காட்டியவர்…
பேரன்பு கொண்ட காயிதேமில்லத்தின் பேரன் தாவூத் மியாகானும், நானும் இசைமுரசு அவர்களின் இல்லம் சென்று நலம் விசாரித்தோம்..
தனது சென்னை இல்லத்திற்கு காயிதேமில்லத் பெயரை சூட்டிய இசைமுரசிடம் அவர் மகன் நௌஷாத்தும், நானும் தாவூ த்மியாகானை அறிமுகம் செய்ய காயிதேமில்லத் பேரனை எனக்குத்தெரியாதா? என்றார்.

பாட்டாலும், பாசமிகு கூட்டாலும், தன் பாட்டனாரின் மனம் கவர்ந்த இசைமுரசுக்கு தனது மகளின் திருமண அழைப்பு கொடுத்து வாழ்த்து பெற்றார் தாவூத் மியாகான்..

அப்போது நெகிழ வைக்கும் சில நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார் தாவூத் மியாகான்…

ஓர் இரவு நேரம்..

சாப்பிட அமர்கிறார் காயிதேமில்லத்..
அந்நேரம், தொடர்ந்து உச்ச தொனியிலேயே பாடியதால் நாகூர் ஹனீஃபா  ரத்தவாந்தி எடுத்துவிட்ட தகவல் காயிதேமில்லத்துக்கு வருகிறது.
உடனே உணவைப் புறந்தள்ளிப் பதறி எழுந்த பாசத்தலைவர் ஹனீஃபாவின் உடல்நிலை சீராகும் வரை அவர் உடனிருந்துள்ளார்.
”மண்ணிலே பிறந்ததேனோ எங்கள் பெருமானே” என்ற பாடலை ஹனீஃபாவைப் பாடவைத்து அடிக்கடி கேட்டு மகிழ்பவர் காயிதேமில்லத்.

நோய்வாய்ப்பட்டு அந்த பாசத்தலைவர் படுக்கையில் இருந்த வேளையில், மரணிப்பதற்கு 10 நாள் முன்பு இறையருட்கவிமணி பேராசிரியர் கா.அப்துல்கஃபூர், எஸ்.எம்.ஷரீஃப் எம்.பி.,  நாகூர் ஹனீஃபா ஆகியோர் காணவந்துள்ளனர்..

இறையருட்கவிமணிக்கு, தான் இயற்றிய நபிமணி மாலையை காயிதேமில்லத் முன்னிலையில் அரங்கேற்றம் செய்ய ஆவல். படுக்கையில் கிடக்கும் தலைவரின் முன்பு பாடல்களை எழுச்சியோடு பாடி அரங்கேற்றுகிறார் இசைமுரசு..
“ஆதி இறையோன் தூதர் நபி
அன்பே வடிவாம் நாதர் நபி”

மரணப்படுக்கையிலும் இப்பாடல் காயிதேமில்லத்தின் மனதை மலர வைத்துள்ளது…
அன்னார் இறக்கும் வரை முகத்தில் நாயக நேசத்தால் உண்டான ஒளி இருந்தது என்றார் தாவூத்மியாகான்…

எவ்வளவோ செய்திகள்…
கேட்டுக்கொண்டே இருக்கத் தோன்றியது…
புலவர் ஆபிதீன், கவிஞர் காசிம், கா.அப்துல் கஃபூர் ….இத்தகைய புலமையும்,செழுமையும் கொண்ட கவிஞர்கள் காயிதேமில்லத்தால் ஆதரித்துப் போற்றப்பட்டுள்ளனர்.
இசைமுரசின் குரல் இவர்களின் கருத்துக்கு வாகனமாகவும்,கவிதைக்கு மோகனமாகவும் இருந்துள்ளது…

பழைய இளைஞர்கள்(?) தங்களின் தங்கத் தலைவராம் காயிதேமில்லத்தைப் பற்றி பேசும் போது காட்டுகிற உற்சாகம் இருக்கிறதே…அதைப் பார்க்கவேண்டும்..

அந்த காலத்தின் குரலாய் ஒலித்த இசைமுரசை ஒவ்வொருமுறை சந்திக்கும் போதும் அந்த நினைவுகள் சங்கீதமாகின்றன.

– பேராசிரியர் ஹாஜா கனி, மாநிலச் செயலாலர், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்

EMH 1 Nagore Em Haniffa latest EMH 2 EMH 3

 

Tags: , ,

One response to “இசைமுரசை நலம் விசாரித்தார் காயிதேமில்லத் பேரன்…

  1. S.E.A.Mohamed Ali. "nidurali"

    January 5, 2014 at 5:51 pm

    சிறந்த பதிவு ..இசைமுரசு நாகூர் ஹாஜி ஈ.எம். ஹனீஃபா அண்ணன் இறைவன் அருளால் நலமாக வாழ அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன் .

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: