RSS

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 4

24 Oct

ரவீந்தர் எழுதிய “இன்பக்கனவு” நாடகத்தின்போது எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட விபத்து பற்றிய செய்திகள் மிகவும் விளக்கமான முறையில் இருந்தது என்று வாசகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

“நாடோடி மன்னன்” படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகுதான் இந்த விபத்து ஏற்பட்டது. “கண்திருஷ்டி” என்ற ஒன்று உண்டு என்பதில் எம்,ஜி,ஆருக்கு தீவிர நம்பிக்கை இருந்தது. புகழின் உச்சாணிக்கொம்புக்கு உயர்ந்து “வசூல் சக்ரவர்த்தி” என்று பெயர் பெற்று, திரையுலகில் பலருடைய பொறாமைக்கும் ஆளாகியிருந்த அவருக்கு, தனக்கு ஏதோ ஒரு கெட்ட சம்பவம் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று அவருடைய உள்ளுணர்வு அவருக்குள் உறுத்திக் கொண்டே இருந்தது. இது போன்ற உள்ளுணர்வை மனோவியல் துறையில்  Extrasensory perception என்று கூறுவார்கள். இந்த ESP பவர் எம்.ஜி.ஆரிடம் இயல்பாகவே இருந்தது.

சீர்காழியில் நடக்கவிருக்கும் நாடகத்திற்கு திருக்காட்டுப்பள்ளியிலிருந்து காரில் வரும்போது கல்லணை அருகே  “வெகு விரைவில் எனக்கு விபத்து ஒன்று காத்திருக்கிறது” என்று நண்பர்கள் மத்தியில் அவர் வரவிருக்கும் ஆபத்தை கிரகித்து சொன்னதை ரவீந்தர் உட்பட வேறு சில நெருக்கமான நண்பர்களும் உறுதி படுத்தி இருக்கிறார்கள்.

சீர்காழி விபத்து பற்றிய விபரங்கள் அடங்கிய ‘பேசும்படம்’ கட்டுரையையும், அது தொடர்பான காணக்கிடைக்காத அரிய சில புகைப்படங்களையும் வாசகர்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்.

இதில் நிறைய பேருக்குத் தெரியாத செய்தி ஒன்று உண்டு.எம்.ஜி.ஆருக்கு ஒரு காலில்தான் விரிசல் ஏற்பட்டது என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், உண்மையிலேயே குண்டுமணியை தூக்கி வழுக்கி விழுகையில் அவருடைய இரண்டு கால்களுமே பாதிப்புக்குள்ளாயின, (நான் பிரசுரித்திருக்கும் முதல் படத்தை உன்னிப்பாக கவனித்தால் புரியும்).

இடது காலில் அதிகமான பாதிப்பும், வலது காலில் லேசான பதிப்பும் ஏற்பட்டிருந்தது. வலது கால் குணமான பின்தான் அதை ஊன்றிக்கொண்டு இடதுகால் சரியாகும் வரை நடை பயின்றார். அவர் விரைவாக குணம் அடைந்ததற்கு அவருடைய மனஉறுதிதான்  காரணம் என்று டாக்டர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
photo 2

ne99xk

2w37qy9

எம்.ஜி.ஆர்.விபத்து

டாக்டர்கள் குழு காலொடிந்த எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை மேற்கொண்டபோது எடுத்த படம்

2hwzeh4

சிகிச்சை பலனளித்து உடல்நிலை தேறிவரும்போது

33o4guo

குணமடைந்து வருகையில் நண்பர்கள் புடைசூழ எம்.ஜி.ஆர்.

 

mt1kyx

 

33li3qwஎம்.ஜி.ஆரின் நாடகக்குழுவில் அங்கம் வகித்த மற்ற கலைஞர்களைப்பற்றிய விவரங்களையும், அட்வகேட் அமரன் நாடகத்தைப் பற்றிய சுவையான செய்திகளையும் நாம் நம்முடைய அடுத்த பதிவில் ஆராய்வோம்

– நாகூர் அப்துல் கையூம்.

தொடரும்

(காணக்கிடைக்காத அரிய புகைப்படங்களை உரிய நபர்களிடமிருந்து தேடிப்பிடித்து தருவித்துக் கொடுத்த தம்பி ஷாஜகானுக்கு என் மனமார்ந்த நன்றியை வாசகர்கள் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன்)

 

 

 

Tags: , , ,

9 responses to “எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 4

 1. Mohamed Iqbal

  October 24, 2014 at 4:33 pm

  எம்.ஜி.ஆரின். இந்த விபத்து குறித்து மேலோட்டமான செய்திகளைத்தான் இதுவரை அறிந்திருந்தேன்.! உங்கள் பதிவின்மூலம் விபரமாக அரிய புகைப்படங்களுடன் அறிந்துக் கொண்டேன்.! நன்றி.!

   
 2. ravikumar

  October 25, 2014 at 2:12 am

  I took wedding snaps one of his daughter/son’s wedding at vijaya mahal.I was told that he is in MGR group. He was so simple and astonished
  RMV is cutthroat man

   
 3. yarlpavanan

  October 25, 2014 at 7:44 am

  சிறந்த பதிவு
  தொடருங்கள்

   
 4. அப்துல் கையூம்

  October 25, 2014 at 8:42 am

  I will be very much obliged if you could kindly send that photo to me if you have. Regards
  vapuchi@gmail.com

   
 5. தாஜ்...

  October 25, 2014 at 10:48 am

  இந்த எம்.ஜி.ஆர். தொடருக்காக
  கையூம் ஸார் சேகரித்திருக்கும்
  புகைப்படங்கள் அத்தனையும்
  அபூர்வமானது!

  – தாஜ்.

   
 6. shaajahans

  October 25, 2014 at 11:20 am

  அருமையான பதிவு

   
 7. shaajahans

  May 18, 2015 at 11:43 am

  some of your posted pics here could not viewed. Pls do the needful.

   
 8. R.R.ELANGOVAN

  April 27, 2020 at 7:55 pm

  there is no pictures now

   
 9. அப்துல் கையூம்

  May 4, 2020 at 6:41 pm

  yes. Just now I noticed 😦

   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: