RSS

தர்பூசணியின் நிலைமை என்னாகும்?

03 Nov

 

watermelon2

வாட்ஸ்-அப்பில் வந்த இந்தி கவிதை இது. யார் இதனை எழுதியது என்ற விவரம் தெரியவில்லை. மதநல்லிணக்கத்தை உணர்த்தும் இக்கவிதையை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன்

Nafraton ka asar dekho,
Janwaron ka batwara hogaya,
Gaay Hindu hogayi;
Aur Bakra Musalmaan hogaya.

Mandiron mein Hindu dekhe,
Masjidon mein Musalmaan.
Shaam ko jab Maiqhaane gaye;
Tab jaakar dikhe insaan.

Ye ped
ye patte
ye shaaqhe bhi
pareshan hojayen,
Agar parinde bhi Hindu aur Musalmaan hojayen.

Sukhe mewe bhi ye dekh kar
hairaan hogaye,
Na jaane kab naariyal Hindu
Aur khajoor musalmaan hogaye…

Jis tarah se
dharm mazhab k naam pe
hum rango ko bhi baat te ja rahe hain.
Ki hara Muslim ka hai,
Aur laal Hindu ka rang hai.

To wo din dhoor nahi
Jab saari ki saari hari sabziyan
Musalmaano ki hojayegi
Aur Hinduwo k hisse
bas Tamatar aur Gaajar hi ayenge!

Ab ye samaj nahi araha ki
ye tarbooz kis k hisson mein ayega?
Ye to bechara upar se Musalmaan
aur andhar se Hindu hi rah jayega…

——————————————————

மதவெறுப்பால் நேர்ந்த வினை.
வாயில்லா ஜீவன்களுக்கிடையிலும்
வெற்றிகரமாய் பிரிவினை.
மாடு இந்துவாம்
ஆடு முஸ்லிமாம்

கோயிலில் காண்பது இந்துவை
பள்ளிவாசலில் காண்பது முஸ்லீமை
மாலைவேளையில் ….
மதுபானக்கடையில் மட்டும்
அதிர்ஷ்டவசமாய் காண்கிறோம்
சமரசம் பேணும் மனிதனை

இந்த மரங்கள்…..
இந்த இலைகள்….
இந்த கிளைகள்…
இவைகளுக்கும் குழப்பம்வரும்
இளைப்பாறவரும் பறவைகளும்
இந்துக்கள், முஸ்லீம்கள்
என ஆகிவிட்டால்.
(ஆம். யாருக்குத்தான்
அடைக்கலம் தருவதென்று?)

தின்பண்டங்களுக்கும்
தீராத குழப்பம்
தேங்காய் இந்துவாகவும்
பேரீச்சம்பழம் முஸ்லீமாகவும்
அடையாளக்குறி ஆகிவிட்டதால்

மதத்தின் பெயரால்
நிறங்களுக்கும் பூசிவிட்டோம்
மதச்சாயம்.
பச்சை முஸ்லீமாகி விட்டது
இளஞ்சிவப்பு இந்துவாகிவிட்டது

எல்லா பச்சை காய்கறிகளும்
முஸ்லீம்களுக்கென ஆகும் நாள்
வெகுதூரத்தில் இல்லை.
இந்துக்களுக்கென்று வெறும்
தக்காளியும் கேரட்டும் மட்டுமே

ஒன்று மட்டும் புரியவேயில்லை!
தர்பூசணியின் நிலைமை
என்னவாகும் என்று?
பாவம்….
மோலோட்டமாக அது முஸ்லீம்
உள்ளுக்குள் அது இந்து

மொழியாக்கம்: அப்துல் கையூம்

Advertisements
 

Tags:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: