RSS

கிளைமாக்ஸ்தான் நாடகம்

22 Feb

death 1

மரணத்தின் ஒத்திகை
நித்திரை என்பார் !
மறுக்க முடியாத
சத்திய வார்த்தை அது !

ஆம்…..
இன்றோ என்றோ நிகழவிருக்கும்
எதிர்பாரா நாடகத்திற்கு
அன்றாடம் நிகழும்
ஆசன உடற்பயிற்சி அது!

நிகழ்தேதி தெரியாது !
நிகழ் நேரம் தெரியாது !
அரங்கேற்றம் உண்டு ஒருநாள்
அதுமட்டும் நிச்சயம் !!

கனவுக்காட்சிகள் வருவது
ஒத்திகையில் மட்டும்தான் !
அரங்கேற்றத்தில் கனவுகள் கிடையாது !
அனைத்தும் நேரலைதான் !!

பின்னணி இசை
தானாகவே பிறக்கும் !
ஓலமாகவோ.. கூக்குரலாகவோ
ஒப்பாரியாகவோ.. நிசப்தமாகவோ
ஒவ்வொருத்தரும் அவர்பங்குக்கு
உச்சஸ்தாயியில் இசைப்பார்கள் !!

இங்கு..
திரை விலகியபின் நாடகம் அரங்கேறும் !
அங்கு..
திரைவிழுந்தபின்தான்
அந்த ஓரங்க நாடகமே தொடங்கும் !

அந்தத் திரை….
மேடையேறும் நடிகனுக்கும்
நாடகம் பார்க்க வந்தவர்களுக்கும்
இடையே விழும் நிரந்தர திரை !
படைத்தவனுக்கும் படைப்புக்குமிடையே
அகன்று விலகும் திரை !!

நாடகத்தன்று மேடை ஏறுகையில்
உயிர் என்ற ஒப்பனை
உடன் கலைந்துவிடும் !
வசனங்கள் வெளிவராது !
அங்க அசைவுகள் கிடையாது !

நாடகத்தில் வெளிச்சமே இருக்காது
வெறும் கும்மிருட்டுதான் !!

மெலோடிராமாதான் சந்தேகமில்லை !

நாடகம் சுபமுடிவாக இருந்தாலும்
புன்சிரிப்பாக ஏற்றுக்கொள்ளும்
மனப்பக்குவம் யாருக்குமில்லை !

நாடகத்தில் என்னவோ ஊமை வேடம்தான் !
அதற்குத்தானா இந்த அன்றாட ஒத்திகை ?

கேள்வி எழலாம்…
நாடகத்தில் கிளைமாக்ஸ் உண்டா..?
ஊஹூம்..
கிளைமாக்ஸ்தான் அந்த நாடகமே!!!

  • அப்துல் கையூம்
Advertisements
 

Tags:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: