RSS

நாகூர் ரவீந்தர் வெளிப்படுத்திய உண்மை

08 Sep

%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%af%8d-2

“ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என்பார்கள்.

தமிழகத்திற்கும் கர்நாடக மாநிலத்திற்கும் பகையை உண்டு பண்ணி ஆதாயம் தேடும் ஆசாமிகளில் முதன்மையானவர் இந்த வாட்டாள் நாகராஜ்.

காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்று கர்நாடகா அரசு நீரை திறந்துவிட்டுள்ளபோதும் மக்களின் இன உணர்வைத் தூண்டி விட்டு குளிர் காய்வது  அன்றிலிருந்து இன்றுவரை இவரது வாடிக்கையாகி விட்டது.

இந்த அரைக் கிறுக்கனை முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் எப்படி மகுடி ஊதிய பாம்பாக பணிய வைத்தார் என்ற நிகழ்வை நாகூர் ரவீந்தரின் நூல் வாயிலாக நாம் அறிய முடிகிறது.

எம்.ஜி.ஆரின் வாழ்வில் நடந்த  சம்பவங்களை எத்தனையோ பேர்கள் எழுதியிருந்தாலும் யாரும் அறியாத பல அரிய செய்திகளை எம்.ஜி.ஆருக்கு உற்ற தோழராக, அவருக்கு நெருக்கமான விசுவாசியாக பணிபுரிந்த கதாசிரியரும் வசனகர்த்தாவுமாகிய எம்.ஜி,.ஆர். பிக்சர்ஸ் ரவீந்தர் எழுதி வைத்திருக்கும் நூல்களின் மூலம் நாம் சான்று கூற  முடிகிறது.

%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%af%8d

வாட்டாள் நாகராஜ் போன்ற நபர்களால் தூண்டப்பட்டு காவிரி நதி நீரை திறந்து விடக்கூடாது என்று கர்னாடக மாநிலத்தில் போராட்டம் வெடித்துள்ள இவ்வேளையில் நாகூர் ரவீந்தர் எப்போதோ எழுதிய ஓர் உண்மை  நிகழ்வு இப்போது முகநூலிலும், ஒன் இண்டியா பக்கங்களிலும் வலம் வந்துக் கொண்டிருக்கிறது. (உபயம்: கிஷோர் கே.சாமி,. காவிரி மைந்தன் இன்னும் பலர்)

நாகூர் ரவீந்தரின் நூலில் காணப்படும் அந்த நிகழ்வு இதுதான்:

%e0%ae%b0%e0%ae%b5%e0%af%80%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d

நாகூர் ரவீந்தர்

கர்நாடக மாநிலத்தில் மக்கள் திலகத்தின் படங்களை ஓட்டக் கூடாது என்று வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கும்பல் போஸ்டர்களை கிழிப்பதும் , திரையரங்குகள் முன்னர் மறியல் செய்வதும் என்று செய்துக் கொண்டிருந்த காலக் கட்டத்தில், அதை மக்கள் திலகம் எப்படி எதிர்கொண்டார் என்பது ஒரு சுவாரசியமான நிகழ்வு ….

%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d

இது குறித்து தகவல் அறிந்ததும், மக்கள் திலகம் நேரே பெங்களூருக்கு புறப்பட்டார் .

“அந்த வாட்டாள் நாகராஜ் ஒரு முரடர் , அவரிடம் நீங்கள் சென்று பேச வேண்டுமா?”  என்று சிலர் தடுத்த பொழுதும்.

“நான் பேசப் போகிறேன், வாதிக்கப் போவதில்லை. அவர் மனிதர் தான், ஒரு இயக்கத்தவர் தான்” என்று வாட்டாள் நாகராஜின் அலுவலகத்தினுள் சென்று விட்டார் .

வாட்டாள் நாகராஜ், திமிருடன் அமர்ந்தபடியே, மக்கள் திலகத்தை அமரச் சொல்லி விட்டு ,

“என்னை பார்க்க வந்ததன் நோக்கம் என்ன ? என்று கேட்க …

மக்கள் திலகம் “தமிழ் படங்களை ஓட விடக் கூடாதுன்னு நீங்க சொல்றீங்களாம் , அதுக்கு என்ன காரணம் ? யாரும் சரியா சொல்லலை , அதான் உங்க வாயாலேயே கேட்டு தெரிஞ்சிக்கலாம்னு வந்தேன் … ” என்றார் .

வாட்டாள் நாகராஜ் சற்று யோசித்து பின்னர் ,

“எங்க கன்னட படத்தை நாங்க எப்படி எடுத்தாலும் ஓடுறதில்லை, உங்க தமிழ் படங்கள் ஓடுது.  அதுக்குத் தான் வசூல். அதனால் தான் என்றார்.

“சந்தோசம் , எந்த ஒரு காரியத்துக்கும் அடிப்படையை யோசிக்கணும், நீங்க தமிழ் படத்தை தடுத்தாலும் பாதிப்பு கன்னட காரர்களுக்குத் தான் என்று மக்கள் திலகம் சொல்ல ….

வாட்டாள் முகம் சுளித்தபடி ” புரியலே …” என்று சொல்ல …

மக்கள் திலகம் தொடர்ந்தார் : ” கொஞ்சம் பொறுமையா கேட்கணும், நாங்க எடுக்கறது தமிழ் படமானாலும் , அதில் பணி புரிகிற பெரும்பாலானவர்கள் உங்க மாநிலத்துக்காரங்கதான்”

ஆரம்ப கால டைரக்டர், 300 நாட்கள் ஓடிய “ஹரிதாஸ்” எடுத்தவர் சுந்தராவ் நட்கர்னி. அவர் கொங்கனியர். உங்க மாநிலத்தவர். பெரிய படங்கள் எடுத்த பந்துலு யார் தெரியுமா? அவங்க மனைவி எம்.வி.ராஜம்மா யார் தெரியுமா ? உங்க நாட்டவங்க . அங்கேயுள்ள ஸ்டூடியோ ஓனர் விக்ரம் யார்? அவர் உங்க நாட்டவர் . அவர் என்னையும் வைத்து படம் எடுத்தார் … படம் – பட்டிக்காட்டு பொன்னையா .

என்னோடு நடித்த சரோஜா தேவி யார்? எல்லாரும் உங்க நாட்டு செல்வங்கள். உங்க நாட்டு மிகப் பெரிய ஹீரோ ராஜ்குமார் யார்? பூர்வீகம் திருச்சியாம். அவருடைய முதல் படமே எங்க நாட்டுக்காரர் தான் எடுத்தார் …. படம் ” வேடன் கண்ணப்பா ” … அவருக்கு அங்கே பெரிய வீடு இருக்கு .

நான் சொன்ன எல்லோருக்கும் அங்கே பெரிய பெரிய வீடு இருக்கு. உங்க நாடு பெத்தது, இது தாய் நாடு … எங்க நாடு வளர்த்தது , அது செவிலித் தாய் நாடு. பெத்த தாயை விட வளர்த்தவளுக்கும் மரியாதை கொடுக்கணும் இல்லையா?

எங்க நாட்டுக்காரங்களுக்கு இங்க வீடு இருக்கா? வாசல் இருக்கா? ஒருத்தர் இங்கே இருக்கிறார், அவராலும் உங்களுக்கு பெரிய வருமானம். சுவாமி ராகவேந்திரர் . புவனகிரியில் பிறந்தவர் . தூத்துக்குடியில் தான் சங்கு விளையுது, அதில் தான் உங்க நாட்டு பிள்ளைங்களுக்கு பால் வார்ப்பாங்க.

உங்க காட்டுல தான் சந்தனம் விளையுது, அதில் தான் எங்க நாட்டு தலைவர்களை தகனம் செய்வாங்க ….

இப்படி பிறப்புக்கும் இறப்புக்கும் இரண்டு நாடுகளும் ஒன்றுபடுது. இதுக்கு மேலையும் நீங்க தமிழ் படத்தை எதிர்க்க விரும்பினா. என் படங்களை கன்னட ஏரியாக்களுக்கு விற்க வேண்டாம்னு சொல்லிடறேன். அந்த நஷ்டத்தை புரடியூசர்களுக்கு என் சம்பளத்திலிருந்து கொடுத்து விடுகிறேன். பிலிம் சேம்பரிலும் சொல்லி கர்நாடகாவுக்கு விற்க வேண்டாம்னு கேட்டுக்கறேன் என்றார் மக்கள் திலகம் ……

அந்தக் கணமே தம்மையும் அறியாமல் இருக்கையிலிருந்து எழுந்த வாட்டாள் நாகராஜ், மக்கள் திலகத்தின் கைகளை பற்றிக் கொண்டு “இனிமே உங்க படத்துக்கு நானே பாணர் கட்டறேன் , போஸ்டரும் ஓட்டறேன் ” என்றார் …..அது தான் மக்கள் திலகம்.

“ஆனை  இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்”  என்பார்கள்.      எம் ஜி.ஆர் பிக்சர்ஸ் ரவீந்தர் மறைந்தாலும் அவ்வப்போது அவர் வார்த்த தகவல்களால் இன்றும் நம் நினைவில் வாழ்கிறார். 

 

 

Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: