RSS

Category Archives: ஏ.ஆர்.ரஹ்மான்

நவீன தான்சேன்


இன்று (Jan 6) தன் 44-வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.

ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் பரிசைப் பெறுவதற்கு முன்னரே, அவர் ஆஸ்கார் பரிசைப் பெற வேண்டும் என்ற அவாவில் நான் எழுதிய கவிதை “ஆபிதீன் பக்கங்களில்” பிப்ரவரி 7, 2009 அன்று பிரசுரமாகியிருந்தது. அந்தக் கவிதையை இங்கே அவருக்காக அர்ப்பணம் செய்கிறேன்.

‘ரோஜா’ ஈன்ற ராஜா

——————

அமைதியான ‘இசைப்புயல்’
இச் சின்னப் பயல்

உருவம் சிறியது;
இவனுக்கு
உலகமும் சிறியது

சிறு வயதிலேயே
விறுவிறுவென்று
உலகை வலம் வந்தவன்

நமக்கெல்லாம்
உள்ளங்கையில் ரேகை
இவனுக்கோ
உள்ளங்கையில் உலகம்

சிந்தசைஸரினால்
சிந்தனைச் செய்யும்
சிந்தனைச் சிற்பியிவன்

இசையில் எதை கலக்கின்றான்
இந்த லாகிரி வஸ்தாது?
கேட்டதும்
கிறுகிறுத்துப் போகின்றோமே?

(ஆர்மோனியக்)
கட்டையைப் பிடித்து
பட்டையைக் கிளப்பும்
கெட்டிக்காரன் இவன்

இவனை
‘நம்மவன்’ என்று
பீற்றிக் கொள்ளுகையில்
உதடுகள் கூட
ஒட்டிக் கொள்கிறது

சாந்தமான இவனின்
காந்த இசை
வடதுருவம்
தென்துருவம்
இரண்டையும் இணைக்கும்

பரிகாசம் செய்தவர்களெல்லாம்
இவன்
பிரகாசத்தைக் கண்டு
வாயடைத்து
வனவாசம் போய்விட்டனர்.

பாவேந்தன் – புரட்சிக் கவிஞன் என்றால்
இவ்விசை வேந்தன் – புரட்சிக் கலைஞன்

இசையுலக வரை படத்தில்
இந்தியாவை இணைத்த
இசைத் தூதுவன் இந்த
நவீன தான்சேன்

ரகுமானுக்கு இதுபோன்ற
வெகுமானமெல்லாம்
தொலைவானம் அல்ல
தொடுவானம்தான்

இவன்
‘ஆஸ்கார்’ வாங்கட்டும்
அப்புறம் பாருங்கள்
‘ரோஜா’ தந்த ரோஜாவை
சட்டைப் பையில் குத்திக்கொள்வான்
ஒவ்வொரு இந்தியனும் .

– அப்துல் கையூம்

A.R.Rahman’s N agore Visit

 

King of Sing(ing) with Singh is King


கோஃபி அன்னானுடன்  ஏ.ஆர்.ரகுமான் இருந்த புகைப்படத்தை பிரசுரித்து, நெல்சன் மண்டேலா என்று தவறுதலாக எழுதப் போயி, மறுபடியும் நான் ஏமாந்து போவேன் என்ற நப்பாசையில் “இதோ குஷ்வந்த் சிங்குடன் ஏ.ஆர்.ரகுமான் இருக்கும் புகைப்படத்தை உங்களுக்கு ஈமெயிலில் அனுப்பி இருக்கிறேன் என்று மேலேயுள்ள படத்தைப் அனுப்பி குசும்பு பண்ணியிருக்கும் முகம்மது சலீமை என்னச் செய்வது சொல்லுங்கள்.

ஏதோ தினசரி பத்திரிக்கையை அன்றாடம் படிப்பதினால் இதுபோன்ற சதிகளில் இருந்து சாமர்த்தியமாக நானும் தப்பித்துக் கொள்கிறேன். இல்லாவிட்டால் என் கதை கந்தல்தான் போங்கள்.

(பி.கு. என் வாசக அபிமானிகள் சாடுவதாக இருந்தால் mhsaleem@hotmail.com என்ற முகவரியில் அவரைச் சாடவும்)

ஞாபகம் வந்த ஒரு ஜோக் : ஒரு சர்தார்ஜி பார்க் பெஞ்சில் ஹாய்யாக படுத்து ஓய்வெடுத்துக்கொண்டு இருந்திருக்கிறார்.அவ்வழியே சென்ற வழிப்போக்கர் ஒருவர் “Are You Relaxing?” என்று கேட்டிருக்கிறார். “No. No. Iam Premnath Singh” என்று பதில் சொன்னாரம் அவர்.

 

 

பாபுஜீ vs ரஹ்மான்ஜீ


“காமெடி பண்ணுவதற்கு அளவே இல்லையா? விட்டால் காந்தியுடன் ரஹ்மான் இருக்கும் புகைப்படம் போடுவீர்கள் போலிருக்கிறதே!” என்று ஆபிதீன் எழுதியது என் மனதில் சுருக்கென்று தைத்து விட்டது. என் மகன் டானீஷிடம் இதைச் சொன்னேன். என்ன நினைத்தானோ தெரியவில்லை. இந்த படத்தை தயார் செய்து கொடுத்து விட்டான்.

 

அண்ணான் தம்பி


நெல்சன் மண்டேலா இவர்களுடன் கோபி அண்ணன் (Kofi Annan), முருகன் பிரிமேன் (Morgan Freeman)

See Look Alikes

 

I wish to keep a fullstop for this problem.
See the enclosed picture.

MOHAMED SALEEM

“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு”

என்று திருவள்ளுவர் சும்மாவா சொன்னார். ‘கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல’ இந்த மண்டேலா பிரச்சினையிலிருந்து எப்படி வெளியே வருவது என்று மண்டையை உடைத்துக் கொண்டிருந்த என்னை, இந்த போட்டோவை அனுப்பி கீழே உள்ள குறிப்பையும் அனுப்பி என்னைக் காப்பாற்றிய நண்பர் சலீமுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

[என் குறிப்பு : அனுப்பியதுதான் அனுப்பினார். கிராபிக்ஸ் தகிடுதத்தம் தெரியாத அளவுக்கு இன்னும் கொஞ்சம் சுத்தமாக அனுப்பியிருக்கலாம். தானமாக கிடைக்கிற மாட்டை பல்லைப் பிடித்து பார்க்கக் கூடாது என்பார்கள். ஒகே. தேவலாம். ‘ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப்பூ சக்கரை’ என்பதைப் போல இப்போதைக்கு இதை வைத்து ஆபிதீனையும் இஸ்மாயீலையும் சமாளித்துக் கொள்வேன்.]

 


“அன்பு கய்யும்,

அதிர்ச்சியான ஒரு தகவல் ஒன்று உண்டு. ரஹ்மானுடன் மண்டேலா இருப்பதாக நீங்கள் போட்டிருக்கும் புகைப்படம்தான் அது. ஓய், அது கோபி அன்னான்! வேறு யாரும் பார்த்து வெடைக்கும் முன்பாக உடனே Descriptionஐ மாற்றுங்கள்.

எதற்கும் இருக்கட்டும் என்று கோபி அன்னானின் புகைப்படத்தையும் இத்துடன் இணைத்திருக்கிறேன்! விக்கி? இதோ :
http://en.wikipedia.org/wiki/Kofi_Annan

காமெடி பண்ணுவதற்கு அளவே இல்லையா? விட்டால் காந்தியுடன் ரஹ்மான் இருக்கும் புகைப்படம் போடுவீர்கள் போலிருக்கிறதே!”

ஆபிதீன்

இந்த கடிதம் ஆபிதீன் ‘அன்னான் கோபி’த்துக்கொண்டு எழுதியது. அவருடைய பதிவுக்கு நிறைய பின்னூட்டம் வரும். எனக்கு யாருமே எழுதுவதில்லை. இப்படியாவது ஒரு கமெண்ட் வந்ததே என்று எனக்கு அநியாயத்திற்கும் சந்தோஷம் வந்தது.

என்னிடம் ஒரு அரபி சொன்னார். “குல்லு ஹிந்தி சேம் சேம் ஷகல்” என்று. அவருடைய கண்ணுக்கு இந்தியர்கள் அனைவரும் ஒரே மாதிரியாகத்தான் தெரிகிறார்களாம். நம் கண்ணுக்கு சீனாக்காரர், கொரியாக்காரர், ஜப்பான்காரர், பிலிபினோ எல்லோரும் ஒரே மாதிரியாகத் தெரிவதில்லையா?

என் கெட்ட நேரம் நெல்சன் மண்டேலாவும், அண்ணன் கோபி அவர்களும் சாரி கோபி அன்னானும் ஒரே மாதிரியாகத் தெரிந்திருக்கிறார்கள். என் பதிவிலும் விதி விளையாடி விட்டது. கடைசியாக ஆபிதீன் அன்னானிடம் இப்படி வாங்கி கட்டிக் கொள்ள வேண்டியதாகி விட்டது.

விக்கிபீடியாவிலிருந்து அந்த அண்ணாவின் போட்டோவைக் காண்பித்து “இவர்தான்யா அந்த ஆளு. இதோ பாரு ஆதாரம்” என்று சொல்லுமளவுக்கு என்னுடைய பொது அறிவு வீக்காகி விட்டதே என்று நொந்து போய் விட்டேன்.

நல்லவேளை இந்த படத்தை ரஹ்மான் அண்ணா பார்த்திருக்க மாட்டார் என்று நம்புகிறேன். பார்த்திருந்தால் “மண்டேலாவுக்கும், கோபி அன்னானுக்கும் வித்தியாசம் தெரியாத நீ எல்லாம் ஒரு மனுஷனா?” என்று கிடாராலேயே என் மண்டையில் ஒரு போடு போட்டிருப்பார்.

நன்றி ஆபிதீன். என் கண்ணுக்கு பாருக் அப்துல்லாவுடைய பேரன் உமர் அப்துல்லாவும், இந்திராகாந்தியின் பேரன் ராஹுல் காந்தியும் ஒரே மாதிரியாகவே தெரிகிறார்கள். மறுபடியும் ஏதாவது சொதப்பி விடுவேனோ என்று மனது திக்திக் என்று அடித்துக் கொள்கிறது.

நாகூர் பாஷையில் சொல்ல வேண்டுமெனில் “அல்லா வச்சு காப்பாத்த!!!!”

 

ஏ.ஆர்.ரஹ்மான் அரிய புகைப்படங்கள்


 

Isai Mani with Isai Puyal