RSS

Category Archives: நாகூர் பரீது

ஸ்டண்ட் நடிகர் நாகூர் பரீது


நாகூர் குஸ்தி பரீது காக்கா அவர்களைப் பற்றிய ஏராளமான தகவல்கள் நான் முன்பே பதிந்துள்ளேன் அது மட்டுமல்லாமல் எனது நண்பர்கள் அப்துல் கையூம்Thaha Maraikayar Nagore ஆகியோரும் அவர்களைப் பற்றிய செய்திகள் அருமையாய் தந்துள்ளார்கள்..அவற்றை வாசித்து நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம் ..

பரீது காக்கா சினிமாவில் பணிபுரிந்த போது உள்ள நிறைய புகைப்படங்கள் இருக்கின்றன ..அவற்றில் சில புகைப்படங்கள் பதிந்து உள்ளேன்.படம்

113

1….1950 க்கு பிறகு வெளிவந்த நாகேஸ்வர ராவ் அஞ்சலதேவி நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் அலாவுதீனும் அற்புத விளக்கும் ..இதில் குதிரை வீரனாய் பரீது காக்கா நடித்து இருப்பார்கள் .. குதிரை வீரன் பரீது காக்கா அஞ்சலதேவியை கடத்தி செல்லும் காட்சிப் படம் தான் இது.. இடமிருந்து வலமாக பரீது காக்கா ,ஜி.சகுந்தலா,அஞ்சலதேவி.மற்றும் துணை நடிக நடிகையர்கள்…

112

படம் 2.. கதாநாயகன் நாகேஸ்வர ராவுடன் சண்டைக் காட்சியில் மோதும் காட்சி.. (கீழே படுத்து இருப்பது )

114

படம் 3.. 1966 ல் T.R. ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் குமரிப் பெண் ரவிசந்திரன் ஜெயலலிதா மனோகர் நடித்தது.. இப்படத்திற்கு சண்டை பயிற்சி நாகூர் பரீது காக்கா தான்..அந்நாளில் நான் படம் பார்க்க விரும்பினால் யாராவது பெரிய ஆளை துணைப் போட்டுத்தான் எங்கள் வீட்டில் என்னை அனுப்புவார்கள்..இந்த படத்தை யாருக்கும் தெரியாமல் நான் மட்டும் தனியாக சென்று நாகை பாண்டியன் திரையரங்கில் பார்த்த படம் ..பரீது காக்காவின் சண்டைக் காட்சியைப் பார்க்க நாகூர் மக்கள் அலைமோதியது..ரவிசந்திரனுக்கு டூப்பாக வருவார்கள் (ரவிசந்திரன் போல் டீசர்ட்டுடன்)) கீழே படுத்துக் கிடப்பது நடிகர் மனோகர்.. படம்

111

4… பரீது காக்கா ,நடிகர் மனோகர் மற்றும் துணைநடிகர் ,படக்குழுவினர்..

எத்தனையோ பெரிய வாய்ப்புகள் வீட்டுக் கதவைத் தட்டியப் போதும் ,பேரும் புகழும் பொருளும் தேடி வந்தும் ஏதோ சில காரணங்களால் ஏற்க மறுத்து விட்டார்கள் ..திறமையினால் பெருமையுடன் வாழ வேண்டியவர் இறுதி வரை வறுமையில் வாழ்ந்து மறைந்தார்கள்..சிங்கப்பூரில் இருக்கும் எனது இளைய மகளை உகப்புடன் தூக்கி வளர்த்தவர்கள்..நாகூரின் தற்காப்பு கலை வீரர்கள் பற்றிய பட்டியலும் தகவல்களும் இன்னும் நிறைய உள்ளது ..அவ்வப்போது பதிவோம்.இருக்கும் பட்டியலில் முக்கியமானவர்கள்..S.S. பரீது மரைக்காயர் மாமா,வாஞ்சூர் பக்கிரிசாமி வாண்டையார், அவர் மகன் பன்னீர், அரிசிக்கடை கோவிந்தாவின் அண்ணன் நாகூர் சின்னையன், தங்கபிரகாசம். திட்டச்சேரி பூரான் ஷரிப், பூரான் சுல்தான் பற்றிய சிறப்பு செய்திகளும் நிறைய உள்ளன..விரைவில் எழுதுவோம்..

கவிஞர் நாகூர் காதர்ஒலி

%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b2%e0%ae%bf

 

Tags: