RSS

Category Archives: நாகூர் யானை

நாகூர் யானையும் மனோகரா சிவாஜியும்


Nagore Elephant chained

“மனோகரா” சிவாஜியாய்
நாகூர் யானை
காலில் கனத்த சங்கிலி

 

யானைகள் பலவிதம்


2712167345_a744af52a7temple-elephant

பாவம் வாயில்லாப் பிராணிகள். அதற்கு சைவயானை என்றும், வைணவ யானை என்றும், முஸ்லிம் யானை என்றும் மதச் சாயம் பூசி விடுகிறான் மனிதன். யானைக்கு ‘மதம்’ பிடிப்பது இதனால்தானோ? கவிஞர் வைரமுத்துவின் கவிதை நினைவில் வந்தது. இதோ அந்தக் கவிதை :

விலங்குகள் நம்மிலும்
மானமுள்ளவை

யானையின் காலில்
யானை விழுந்ததாய்த்
தகவல்கள் இல்லை

காட்டுக்குள்
மூட நம்பிக்கை இல்லை

அங்கே
நெருப்புக்கோழி கூடத்
தீ மிதிப்பதில்லை

மதம் பிடித்தலையும்
மனிதா

யானை தவிர
மற்ற விலங்கெதற்கும்
மதம் பிடித்ததுண்டா?

ஒரு
கிறிஸ்தவக்கிளி – இந்துப்புலி
சமணக்கொக்கு – பெளத்தப்பசு
சீக்கியச்சிங்கம் – மகமதியமான்

காட்டுக்குள் அடையாளம்
காட்ட முடியுமா?

vairamuthu

– கவிப்பேரரசு வைரமுத்து

 

நாகூர் யானை


Nagore Elephant

“ம்மாவுக்குத் தெரியாமல் பள்ளிவாசலுகுப் போவது மாதிரி யானைக்கொட்டகை சந்தில் போய் நின்றுவிடுவேன். யாராவது யானைக்கு பூவன் வாழைப்பழம் கொடுத்துக்கொண்டிருப்பார்கள். நீண்ட கறுப்பு தும்பிக்கையால் அதை யானை பிடுங்கிக்கொள்ளும். பாவம் ரொம்ப பசிபோல. அதன் தும்பிக்கையின் முனையின் உட்புறம் வெளுப்பாக அல்லது செக்கச்செவேல் என்று ஏதோ நோய் பிடித்த மாதிரி இருக்கும். இந்த யானையோடு சேர்ந்து ஒரு நாள் ஜும்ஆ தொழுதால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்வேன். ரொம்ப அற்புதமாக இருக்கும். யானை எப்படி தொழும் என்று கற்பனை செய்வதே ரொம்ப வேடிக்கையாக இருந்தது. ஆனால் இதெல்லாம் ம்மாவுக்குத் தெரியாது. ம்மாக்களை ஏமாற்றுவது சுலபம். அதற்காகவே அவர்கள் பிறந்திருப்பவர்கள்.”

– 2004 ஆனந்த விகடன் தீபாவளிமலரில் நாகூர் ருமி எழுதிய “வெள்ளிக்கிழமை” என்னும் சிறுகதையிலிருந்து.

பார்க்க : வெள்ளிக்கிழமை சிறுகதை