RSS

துபாய்: இலக்கியக் கர்த்தாக்களின் நவீனக் கூடல்! –

16 Apr

சென்ற,

12.4.2012 வியாழன் இரவு,
துபாயில்
‘இலக்கியக் கூடல்’ நிகழ்ச்சி ஒன்றை
‘அமீரகத் தமிழ் மன்றம்’
சிறப்பாய் நடத்தி இருக்கிறது.

ஜெயமோகன்/
நாஞ்சில் நாடன்/
ஆபிதீன் முதலியோர் பங்கேற்று
கலக்கியிருக்கிறார்கள்.
காணும் நிகழ்ச்சிப் புகைப்படமே அத்தாட்சி.

ஜெயமோகனுக்கு நாஞ்சில் நாடன்
இனிப்பூட்டி விளையாட,
கைகளைக் கட்டிக் கொண்டு நிற்பவர்
நம்ம ஆபிதீன்!

தகவல் : கவிஞர் தாஜ்

மேலும் புகைப்படங்கள்

தொடர்புடைய சுட்டி : அதிர்ச்சியில் இருக்கிறேன்

ஆபிதீன் அற்புதமான எழுத்துக்குச் சொந்தக்காரர். இதுவரை இரண்டே சிறுகதைத் தொகுதிகள் வந்துள்ளன. ஒன்று என் முயற்சியில் ஸ்நேகா வெளியீடாக, சொதப்பலாக வெளியான ‘இடம்’ என்ற தொகுதி. தற்போது எனி இண்டியன் வெளியிட்டிருக்கும் ‘உயிர்த்தலம்’ என்ற தொகுதி. ஒருமொழியில் அங்கதம், நகைச்சுவை, கிண்டல், விமர்சனம் இவற்றுக்கான புதிய பரிமாணங்களையும் சாத்தியக்கூறுகளையும் இவர் எழுத்து காட்டும்.

– நாகூர் ரூமி (Source)

(திண்ணை இதழில் ஜெயமோகன் எழுதியிருந்த கடிதம்)

Sunday May 9, 2010
ஆசிரியருக்கு

சென்ற இதழில் ஆபிதீன் எழுதிய ‘அங்கன ஒண்ணு இங்கன ஒண்ணு’ http://www.thinnai.com/?module=displaystory&story_id=11005024&format=html  சிறப்பான கதை.கதையின் ஓட்டம் மென்மையாக மறைத்துச்செல்லும் வாழ்க்கையின் சிடுக்குகள் மூலம் முக்கியமான கதையாக ஆகிறது இது.

பலவகையான நகைச்சுவைத்துணுக்குகளின் தொகைதான். ஆனால் அவற்றை இணைத்திருந்த விதமும் அதில் இருந்த சரளமும் ஆழமான படைப்பூக்கத்தைக் காட்டின. வாழ்த்துக்கள்

ஜெயமோகன்

(துபாய் – ஆபிதீன் பதிவு -by Jayamohan)

 

Leave a comment