RSS

என்னைப் பற்றி

qaiyum-photo.jpg

                                  

abdul_qayyum_-_1.jpg  அந்த நாள் ஞாபகம்

karunanidhi.jpg 

“அந்த நாள் ஞாபகம்” என்ற இந்த கவிதை நூல் தமிழகத் தலைநகர் சென்னையில் தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் தலைமையில் மே, 2007  25, 26, 27  தேதிகளில் நடைப்பெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய ஏழாம் மாநாட்டில் வெளியிடப்பட்டது.

anda-2.jpg

 போன்சாய்    

   ( கவிதைத் தொகுப்பினைக் காண கிளிக் செய்யவும்)  
“போன்சாய்”   என்ற இந்த  கவிதைத் தொகுப்பு பஹ்ரைன் நாட்டில் டாக்டர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களால் வெளியிடப்பட்டது .                             

scan00013.jpg போன்சாய் நூலைப் பற்றி :

டாக்டர் கவிக்கோ அப்துல் ரகுமான்

இது அவசர யுகம்; அவசர உணவு; அவசரப் பயணம்; எல்லாம் அவசரம். நீண்ட கவிதைகளை நிதானமாகப் படிக்க நேரமில்லை. இதை உணர்ந்த கவிஞர் அப்துல் கையூம் ‘போன்சாய்’ கவிதைகளைப் படைத்துள்ளார். இக்கவிதைகள் போன்சாய் மரங்களைப் போல சிறியனவாக இருந்தாலும் பெரிய கருத்துக்களைப் பேசுகின்றன.
அப்துல் ரகுமான்
 23.03.06

tamilanban3.jpg 

அந்த நாள் ஞாபகம் நூலைப் பற்றி :

 கவிஞர் ஈரோடு தமிழன்பன்

கவிஞர் நாகூர் அப்துல் கையூம் அவர்களுக்குப் பார்க்கின்ற கண்கள் இருக்கின்றன; பதிய வைத்துக் கொள்ளும் இதயம் இருக்கிறது; பாட்டாக எடுத்துச் சொல்லும் திறமையும்  பழுத்திருக்கிறது.                                                                                                         
போன்சாய் (குட்டிக் கவிதைகள்)

வெளியீடு : கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை – 600 017 

திண்ணையில் வெளிவந்த நகைச்சுவை கட்டுரைகள்

மீசை 
தைலம்
என் இசைப் பயணம்
பங்க்ச்சுவாலிட்டி
சும்மா
குள்ள நரி
சட்டுவம்
சிறுகதை எழுதப் போய்
பஞ்ச் டயலாக்
ஆட்டோகிராப்
ராலு புடிக்கப் போன டோனட் ஆன்ட்டி 
ராக்போர்ட் சிட்டி
மூக்கு
கொட்டாவி
மந்திரம்
காதலர் தினம்
எல்லாமே சிரிப்புத்தானா?
பாகிஸ்தான் பாரதி
கண்ணதாசன் காப்பியடித்தானா?
நாசமத்துப் போ!
உடம்பு இளைப்பது எப்படி?
ஒட்டுக் கேட்க ஆசை
இடைவேளை
பம்பரக்கோனே
ஷாஜகானும் மும்தாஜும் காமெடியும்
வறுமை தின்ற கவிஞன் – சாரணபாஸ்கரன்
இன்னொரு சுதந்திரம் வேண்டும்
இந்தி நடிகருடன் ஒரு இரயில் பயணம்
ஒலிகள் ஓய்வதில்லை
நாகூர் ஒரு வேடிக்கை உலகம்
நாகூர் ஹனிபா – அவர் ஒரு சரித்திரம்
ஒலிகள் ஓய்வதில்லை
புள்ளிகளை பரிகாசிக்காதீர்கள் !
வயதாகியும் பொடியன்கள்

மியாவ் மியாவ் பூனை

 கவிதைகள்  

கலவரப் பகுதி
பூக்கள் – கவிதை  
தாஜ்மகால்
பூஜ்ஜியம் – கவிதை

 head_thinnai.jpg

 

 

 

 

“அந்த நாள் ஞாபகம்” நூலைப்பற்றி  பிரபலங்களின் பாராட்டுக்களும்  வாசகர்களின் கருத்துக்களும்
babu-chicha.jpg 
“அந்த நாள் ஞாபகம்”   – இது நாகூரைப்பற்றி, நாகூர் மக்களுக்காக நாகூரான் ஒருவனால் நெய்யப்பட்ட பட்டாடை. இது நாகூரின் வரலாற்று விதைகளை விருட்சமாக்கியிருக்கிறது.

டாக்டர் அ.அப்துல் ரஜாக்

பெருந்துறை – 17.07.2007
 rumi_kunkumam1_thumbnail.jpg  நாகூர் ரூமி
வில்லியம்ஸ் வொர்ட்ஸ்வொர்த்தைப் போல ‘அமைதியாக நினைத்துப் பார்த்து’ – Recollections  in tranquility – நாகூருக்கு எழுத்தில் உயிர் கொடுத்திருக்கிறார்.

=================================================================== 

“போன்சாய்” நூலைப்பற்றி : பிரபலங்களின் பாராட்டுக்களும்/ வாசகர்களின் கருத்துக்களும்

 

 

 

 

 

11 responses to “என்னைப் பற்றி

 1. Ahil

  December 29, 2009 at 12:59 am

  வணக்கம்,
  உலக தமிழ் எழுத்தாளர்களை இணையத்தளம் ஊடாக ஒன்றிணைக்கும் முகமாக http://www.tamilauthors.com என்ற இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இங்கு எழுத்தாளர்கள் பற்றிய விபரங்களை இலவசமாக இணைத்து வருகின்றோம்.
  நன்றி.
  பிரியமுடன்,
  அகில்.

   
 2. suren

  May 12, 2010 at 7:17 am

  The first Tamil writer who wrote self-improvement books in Tamil was Maraimalai Adigal. Then V.O.Chidambaram Pillai wrote transliterated works of James Allen. Then Tamilvanan wrote many books. After that only Abdutraheem wrote. But still I appreciate and love Abdutraheem books..

   
 3. Asaithambi

  December 2, 2010 at 10:38 am

  அன்புள்ள அப்துல் கையூம் அவர்களுக்கு,

  வணக்கம். என் பெயர் ஆசை. நானும் என் பேராசிரியரும் சேர்ந்து உமர் கய்யாமின் ருபாயியத்தை ஆங்கிலம் வழி தமிழில்
  மொழிபெயர்த்திருக்கிறோம் (ஆங்கிலத்தில் Peter Avery & John Heath-Stubbs). இந்த மொழிபெயர்ப்பு க்ரியாவின் வெளியீடாக விரைவில் வர உள்ளது. தமிழில் இதுவரை வெளியான ருபாயியத் மொழிபெயர்ப்புகளின் பட்டியலைப்‌ புத்தகத்தின் இறுதியில் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கருதினோம். எங்களிடம் கவிமணியின் மொழிபெயர்ப்பும் நாகூர் ரூமி மொழிபெயர்ப்பும் இருக்கிறது. ஆனால் வேறு சிலரின் மொழிபெயர்ப்புகள் எங்களிடம் இல்லை. ச.து.ச. யோகியாரின் மொழிபெயர்ப்பு எங்கே கிடைக்கிறது என்று தெரிந்துவிட்டது. ஆனால் மு.வ., பாலபாரதி ச.து.சு.யோகி, சாமி சிதம்பரனார், தங்கவயல் லோகிதாசன் (1980), இலங்கையைச் சேர்ந்த கவிஞர் அப்துல் காதர் லெப்பை (1965), புவியரசு (1997), ஆ.மா. ஜெகதீசன் (2002), பேரா. அ. சீநிவாசராகவன், வ.மி. சம்சுத்தீன் சாஹிப் மற்றும் வீ.சி. அருளானந்தம் (1936ம், கொழும்பு) ஆகியோரின் மொழிபெயர்ப்புகள் எங்கே கிடைக்கின்றன என்னும் தகவல் இணையத்தில் தேடினாலும் கிடைக்கவில்லை. கூடவே எம். கே. இ. மவ்லானா என்பவர் உமர்கய்யாமின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருப்பதாகவும் கேள்விப்பட்டேன், ஆனால் அந்தப் புத்தகமும் எங்கே கிடைக்கிறது என்றும் தெரியவில்லை. பசுங்கதிர் பதிப்பகம் வெளியிட்டதாகத் தெரிகிறது. ஆனால் தற்போது அந்தப் பதிப்பகம் இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி விவரம் ஏதும் தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல் உங்கள் வலைப்பூவில் கீழ்க்கண்ட தகவலைக் கண்டேன் ‘நாகூர்க்காரர் ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்னரே உமர் கய்யாமின் பாடலை மொழிபெயர்த்திருக்கிறார் என்ற உண்மையை அறியாமலேயே அவர் போய்ச் சேர்ந்தும் விட்டார். ‘ரூபய்யாத்’தை மொழிபெயர்த்த அந்த பெருமைக்குரிய நாகூர் நாயகர் வேறு யாருமல்ல – இலக்கியப் பரம்பரையில் வந்துதித்த கவிஞர் நாகூர் இ. எம். நயினார் மரைக்கார் அவர்கள்தான்.’ உடனே நண்பர் ஆபிதீனுக்கு மின்னஞ்சல் அனுப்பி இ. எம். நயினார் மரைக்கார் அவர்கள் பாரசீகத்திலிருந்து நேரடியாகச் செய்த அந்த மொழிபெயர்ப்பு இப்போது கிடைக்குமா என்று கேட்டேன். அந்த மொழிபெயர்ப்பு தொலைந்திருக்கக்கூடும் என்று அவர் பதிலளித்தார். மேலும் ருபாயியத்தை பற்றிய மேலதிக விவரங்களுக்கு நாகூர் ரூமியைத் தொடர்புகொள்ளச் சொன்னார். ஆனால் நாகூர் ரூமியோ தனக்கு இதைக் குறித்து எதுவும் தெரியாது என்று பதிலளித்தார். நான் மேலே குறிப்பிட்டிருக்கும் மொழிபெயர்ப்புகளைப் பற்றிய தகவல்கள் உங்களுக்குத் தெரிந்திருப்பின் அவற்றை எங்களுக்கு அளித்துதவினால் மிகவும் உதவியாக‌ இருக்கும். என் கைபேசி எண்: 9444512885 (எனது சொந்த ஊர் மன்னார்குடி, தற்போது இருப்பதுவும் அங்கேயே)

  அன்புடன்

  ஆசை

   
 4. Maana

  April 18, 2011 at 9:52 pm

  – for your personal attention !

  அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் !

  இலங்கை – தழிழக சோனகர்கள் (முஸ்லிம்கள்) வரலாறு, பாரம்பரியம், அறுந்து போன தொடர்புகள் மற்றும் இதர அரசியல் விடய்ஙகளையும் ஆராய்ந்து நம் சமூகத்திற்கிடையிலான பாலமாகச் செயற்படும் ஆர்வத்தில் இயங்க ஆரம்பித்திருக்கும் எமது இணையத்தளத்தினை தங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

  தற்போதைய எமது வளமும், அறிவும் இலங்கையின் எல்லைக்கோட்டிற்குள்ளும் அது சார்ந்த வரலாறுகளோடும் வரையறுக்கப்பட்டிருப்பதனால் அந்த வட்டத்திற்கு வெளியில் தமிழகத்திலிருந்து நம்மோடு கை கோர்த்து ஆக்கப்பகிர்வுகள், அதாவது தங்கள் இணையத்தில் வெளிவரக்கூடிய கட்டுரைகள், ஆய்வுகளை இங்கும், நீங்கள் விரும்பினால் எமது செய்திகளை உங்கள் இணையத்திலும் பிரசுரிப்பது மற்றும் ஒன்றிணைந்த ஆய்வுகளை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகள் மூலம் நமது சமூகத்திற்குத் தகவல் வழங்கக்கூடிய சகோதர வட்டத்தைத் தேடி, அதில் தங்கள் இணையத்தை கண்டறிந்த மட்டில் தங்கள் ஆர்வத்தையும் அறியும் நோக்கில் இம்மடலை வரைகிறேன்.

  இது குறித்த தங்கள் பதில் கண்டு மேலதிக கலந்துரையாடலில் ஈடுபடும் நோக்கில் இத்துடன் என் சிறிய மடலை முடித்துக்கொள்கிறேன்.

  Regards.

   
 5. N.Rathna Vel

  July 20, 2011 at 10:28 am

  Kindly register my mail id: rathnavel_n@yahoo.co.in
  and send your future blogs to my mail id. Followers Widget not available.
  Thanks.

   
 6. Ramesh R A

  October 15, 2012 at 5:25 pm

  Came to know about you and your blog through a comment in JV.
  Very very sorry for the worst accident happened to your relatives last month.
  Read your article about that which was referred in JV.

  I would like to appreciate Vaiko,.
  Hence, request you to kindly send me (thro’ email ) the phone numbers of either Vaiko or his secretaries .

  Thank You,

  With Warm Regards,
  Ramesh R A
  Ph.00 971 55 7802168

   
 7. Abdul Qaiyum

  October 17, 2012 at 11:46 pm

  Thank you sir. I am eager to know which edition of JV? Will appreciate your reply. Thank you

   
 8. Appanasamy.

  May 25, 2015 at 8:30 pm

  அன்புள்ள கையூம், வணக்கம்! இன்றுதான் உங்கள் பக்கங்களை வாசிக்க நேர்ந்தது. அனைத்தும் மிகவும் சிறப்பாகவும், நம்பகத்தன்மை கொண்டதாகவும், பாரபட்சமற்ற முறையிலும் அதனாலேயே துணிசல் நிறைந்ததாகவும் உள்ளன. வாழ்த்துகள்! எனது பெயர் அப்பணசாமி. இதழாளர். ஆறாம்திணை என்ர இணைய இதழின் ஆசிரியப் பொறுப்பு வகித்தபோது உங்களிடமிருந்து ஒரு கடிதம் வந்ததாக நினைவு. அது நீங்கள் தானா?

   
 9. A.BALASINGAM

  January 14, 2017 at 7:44 pm

  அன்புடையீர் வணக்கம்,
  தூத்துக்குடி, பழைய துறைமுகம், பீச் ரோட்டில் வ.உ.சி. நூலகம்-ஆய்வுமையம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அதிகம் ஆய்வுமாணவர்
  உறுப்பினராகியுள்ளனர். தற்போது இஸ்லாமிய தமிழ் இ லக்கிய ஆவணக்காப்பகம் துவங்கியுள்ளோம்.
  இஸ்லாமிய தமிழ் இ லக்கிய நூல்கள் வழங்குமாறு வேண்டுகிறோம்.
  நன்றி அய்யா.
  MAILING ADDRESS :
  LIBRARIAN,
  V.OC.LIBRARY & ARCHIVES
  OLD PORT, BEACH ROAD,
  OPP. CUSTOMS-1901
  TUTICORIN 628 001, TAMILNADU
  CELL 9442051238

   
 10. princenrsama

  March 1, 2017 at 5:21 am

  வணக்கம். அய்யா, தங்களின் கட்டுரை ஒன்று தொடர்பாக தங்களிடம் உரையாட விருப்பம். தொடர்பு எண் தேவை. என் மின்னஞ்சலுக்கு அனுப்பினாலும் மகிழ்ச்சி

   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: