RSS

ஆண்டவனும் முகநூல் கணக்கும்

06 Feb

அவன் படைப்புகளின்
எண்ணிக்கையை பட்டியிலிட
எந்த கூகுளும் இணையத்தில் இல்லை !

அந்த படைப்பாளியின் பயோடேட்டா
எந்த WIKIPEDIA-விலும் எழுதப்படவில்லை !

அவனது அண்ட ரகசியங்களை வெளியிட
எந்த WIKILEAKS-ஸாளும்
ஒருபோதும் முடியாது !

அவன் அண்டசராசரங்களை வரைய
எந்த WIKIMAPIA-வாலும் இயலாது !

ட்விட்டர் அக்கவுண்ட் இல்லாமலேயே
அதிகமான FOLLOWERS உள்ளது
அவன் ஒருவனுக்காகத்தான் இருக்கும் !

YAHOO-க்களில் மட்டுமின்றி
அனைத்து தேடல்களிலும்
அதிகமாக தேடப்படும் அன்பன்
அவனாகத்தான் இருக்க முடியும் !

அவனைத் தேடுதற்கு
SEARC ENGINES தேவையில்லை !

சிரம்தாழ்த்தும் மனமிருந்தால் போதும்
தேடல் நிச்சயமாய் பலனளிக்கும் !

அன்றாட வழிபாடுதான்
நாம் போடும் ஸ்டேட்டஸ்

FACEBOOK அக்கவுண்ட்
LOGIN பண்ணாமலேயே
நம் பதிவுகளை அவனால்
தாராளமாக பார்க்க முடியும் !

இணையே இல்லா
அவனது இணையதளத்தை
யாராளும் HACK பண்ண முடியாது.

முகநூல் கணக்கு உள்ளவனுக்கும்
முகநூல் கணக்கு இல்லாதவனுக்கும்
முடிவுநாளில் கணக்கு பார்க்கும்
முதலோனும் அவனே!

நன்மைகளுக்கு LIKE போடவும்
தீமைகளை DELETE பண்ணவும்
அவன் ஒருவனால்தான் முடியும் !

அவனை POKE பண்ண
தொழுகையே போதுமானது.
மிக எளிதானதும் கூட.

அவனது POSTINGS அத்தனையும்
அருள்மறையில் உண்டு

அவனது POSTINGS-யை
மனனம் செய்து
BACK-UP எடுத்தவர்கள்தான்
எத்தனை எத்தனைப் பேர்கள் !!

WIFI இல்லாமலேயே
உரையாட முடியும் அவனோடு !

INTERNET இல்லாமலேயே
கனெக்ஷன் பெறமுடியும் அவனோடு !

அவனுடன் CHAT செய்ய
இரண்டு SERVER-கள் வேண்டும் !

அவன் நம்முடன் CHAT செய்ய
ஓதும் அருள்மறை !

நாம் அவனுடன் CHAT செய்ய
போதும் தொழுகை முறை.

எந்த மொழியிலும் உரையாடலாம்
எந்த சமயத்திலும் உரையாடலாம்
GOOGLE TRANSLATE அவனுக்கு
தேவையே இல்லை

அவனது BIRTHDAY REMINDER
யாருக்கும் வரவே வராது

தேவையே இல்லாதவனுக்கு
பிறந்தநாள் வாழ்த்தா
தேவைப்படும்?

எந்த மாதமென தெரியாது …
எந்த வருடமென தெரியாது …
யாருக்கும் தெரியாது அவனது ஜாதகம்
அவனுக்கு பிறந்தநாளே இல்லை !!

ஏனெனில்
அவன் பிறக்கவும் இல்லை
பெறப்படவும் இல்லை

  • அப்துல் கையூம்

 

 

3 responses to “ஆண்டவனும் முகநூல் கணக்கும்

  1. S.E.A.Mohamed Ali. "nidurali"

    February 6, 2016 at 8:16 pm

    எங்கும் இருப்பவன் அவன்
    அவன் இங்கேயும் இருப்பான்
    அவன் முகநூலிலும் இருப்பான்
    அவன் எங்கு இருப்பினும் உயர்வுதான்

     
  2. Thaz

    February 7, 2016 at 6:53 am

    Masha Allah……..

     
  3. நாகூர் ரூமி

    March 26, 2016 at 8:23 pm

    My Daughter doing I Year M.A. English liked yr poem v much. Of course I too. You are a pride of Nagore. Keep writing dear.

     

Leave a comment